அழகிய கிருஷ்ணர் சிலைகள் நகரில் விற்பனை ஜோர்!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அழகிய கிருஷ்ணர் சிலைகள் நகரில் விற்பனை ஜோர்!

Added : ஆக 28, 2021
Share
உடுமலை:நாடு முழுவதும், வரும், 30ம் தேதி, கோகுலாஷ்டமி விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவையொட்டி, பலரும், கிருஷ்ணர் சிலையை கொலு வைத்து, நைவேத்யங்கள் படைத்து வழிபடுகின்றனர்.இதேபோல், விரதம் இருந்து கூட்டு பஜனையுடன் வழிபாட்டை நிறைவு செய்கின்றனர். இவ்விழாவையொட்டி, உடுமலை நகரில், வியாபாரிகள் சிலர், ஆங்காங்கே, ரோட்டோரத்தில் கடைகள் அமைத்து, அழகிய கிருஷ்ணர் சிலைகளை விற்று
 அழகிய கிருஷ்ணர் சிலைகள் நகரில் விற்பனை ஜோர்!

உடுமலை:நாடு முழுவதும், வரும், 30ம் தேதி, கோகுலாஷ்டமி விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவையொட்டி, பலரும், கிருஷ்ணர் சிலையை கொலு வைத்து, நைவேத்யங்கள் படைத்து வழிபடுகின்றனர்.இதேபோல், விரதம் இருந்து கூட்டு பஜனையுடன் வழிபாட்டை நிறைவு செய்கின்றனர். இவ்விழாவையொட்டி, உடுமலை நகரில், வியாபாரிகள் சிலர், ஆங்காங்கே, ரோட்டோரத்தில் கடைகள் அமைத்து, அழகிய கிருஷ்ணர் சிலைகளை விற்று வருகின்றனர்.வடிவமைப்புக்கு ஏற்றாற்போல், சிலைகள் ஒவ்வொன்றும், 100 முதல் 500 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதனை மக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்கின்றனர்.வியாபாரிகள் கூறுகையில், 'களிமண், பிளாஸ்டர் ஆப் பாரிஸ் கொண்டு, கிருஷ்ணர் சிலை தயாரிக்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில், புல்லாங்குழல், பசு, ஜலக்கிரிடை என பல்வேறு வடிவங்களில் கிருஷ்ணர் சிலைகள் உள்ளன,' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X