நிலக்கடலை அறுவடை தீவிரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நிலக்கடலை அறுவடை தீவிரம்

Added : ஆக 28, 2021
Share
ஆனைமலை:ஆனைமலை தாலுகாவில், மானாவாரியாக நிலக்கடலை சாகுபடி செய்கின்றனர். நடப்பு பருவத்துக்கு கடந்த மே., மாத இறுதியில், கே - 6, வி.ஆர்.ஐ., -- 6, உள்ளிட்ட, 110 நாட்கள் கொண்ட நிலக்கடலை ரகங்களை மானாவாரியாக சாகுபடி செய்தனர்.மிதமான மழை, சீரான தட்ப வெப்பநிலையால் பூச்சி மற்றும் நோய் தாக்குதல்கள் குறைந்து நடப்பாண்டு மகசூல் அதிகரித்துள்ளது, என, விவசாயிகள் மகிழ்ச்சி
 நிலக்கடலை அறுவடை தீவிரம்

ஆனைமலை:ஆனைமலை தாலுகாவில், மானாவாரியாக நிலக்கடலை சாகுபடி செய்கின்றனர். நடப்பு பருவத்துக்கு கடந்த மே., மாத இறுதியில், கே - 6, வி.ஆர்.ஐ., -- 6, உள்ளிட்ட, 110 நாட்கள் கொண்ட நிலக்கடலை ரகங்களை மானாவாரியாக சாகுபடி செய்தனர்.மிதமான மழை, சீரான தட்ப வெப்பநிலையால் பூச்சி மற்றும் நோய் தாக்குதல்கள் குறைந்து நடப்பாண்டு மகசூல் அதிகரித்துள்ளது, என, விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.விவசாயிகள் கூறியதாவது: நிலக்கடலை அறுவடை பணிகள் துவங்கப்பட்டுள்ளன. நிலக்கடலை தரத்தை பொறுத்து, ஒரு கிலோவுக்கு, 33 - 36 ரூபாய் வரை விலை கிடைக்கிறது. அதிகப்படியான விவசாயிகள் இந்த பருவத்தில் நிலக்கடலை சாகுபடி செய்துள்ளதால், தாலுகா முழுவதிலும் ஓரளவுக்கு தீவனத்தட்டுப்பாடு குறையும். இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X