பொது செய்தி

தமிழ்நாடு

இரு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்: முதிர்வு தொகை பெற விண்ணப்பிக்கலாம்

Added : ஆக 28, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி;'இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் புதியதாக விண்ணப்பிக்கலாம்; 18 வயது நிரம்பியவர்கள், முதிர்வு தொகைக்கு விண்ணப்பிக்கலாம்,' என, சமூக நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.பொள்ளாச்சி, சமூக நலத்துறை அதிகாரிகள் கூறியதாவது:சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ், முதல்வரின், இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு

பொள்ளாச்சி;'இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் புதியதாக விண்ணப்பிக்கலாம்; 18 வயது நிரம்பியவர்கள், முதிர்வு தொகைக்கு விண்ணப்பிக்கலாம்,' என, சமூக நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.பொள்ளாச்சி, சமூக நலத்துறை அதிகாரிகள் கூறியதாவது:சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ், முதல்வரின், இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இதில், ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால், 50 ஆயிரம் ரூபாயும், இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் தலா, 25 ஆயிரம் ரூபாயும், 18 வயது பூர்த்தியடைந்த பின் முதிர்வுத்தொகை மற்றும் வட்டித்தொகையுடன் சேர்த்து பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கு, இரண்டாவது பெண் குழந்தை பிறந்த, மூன்று ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். குழந்தைகளின் தாய் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். குடும்ப வருமானம், 72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். ஆண் வாரிசு இல்லை என்ற சான்று சமர்பிக்க வேண்டும்.இதில், குழந்தைகளுக்கு வங்கியில் வைப்புத்தொகை செலுத்தப்படும். அவர்கள், 18 வயது பூர்த்தியடைந்தவுடன் முதிர்வுத்தொகை பெறலாம்.இத்திட்டத்தில் விண்ணப்பம் செய்து, அசல் வைப்பு நிதி பத்திரம் பெற்றுள்ள பயனாளிகளில், 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்களில் உள்ள சமூக நலப்பிரிவு அலுவலர், மகளிர் நல அலுவலர்களிடம் விண்ணப்பிக்கலாம்.அசல் வைப்பு பத்திரம், பயனாளிகளின் புகைப்படம், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான மதிப்பெண் பட்டியல், பயனாளியின் பெயரில் தனி வங்கி கணக்கு புத்தக நகல் ஆகிய சான்றுகளுடன் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். இத்திட்டத்தில் புதியதாக விண்ணப்பிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X