பொது செய்தி

தமிழ்நாடு

கனமழை பெய்யும்; காற்றின் வேகம் அதிகமிருக்கும்!

Added : ஆக 28, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி, உடுமலை, வால்பாறை பகுதியில் இந்த வாரம் கனமழை பெய்யுமென, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.வால்பாறையில் பெய்யும் மழைக்கு, பி.ஏ.பி., அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு முழுக்க, காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால், நள்ளிரவில் கடுங்குளிர் நிலவியதோடு, அதிகாலை நேரத்தில் தேயிலை பறிக்கும்
 கனமழை பெய்யும்; காற்றின் வேகம் அதிகமிருக்கும்!

பொள்ளாச்சி, உடுமலை, வால்பாறை பகுதியில் இந்த வாரம் கனமழை பெய்யுமென, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.வால்பாறையில் பெய்யும் மழைக்கு, பி.ஏ.பி., அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு முழுக்க, காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால், நள்ளிரவில் கடுங்குளிர் நிலவியதோடு, அதிகாலை நேரத்தில் தேயிலை பறிக்கும் பணிக்கு சென்ற தொழிலாளர்கள் கனமழையாலும், பனிப்பொழிவு, கடுங்குளிரால், தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட முடியாமல் தவித்தனர். நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்) விபரம்:வால்பாறை - 27, சோலையாறு - 54, மேல்நீராறு - 42, கீழ்நீராறு - 42, பரம்பிக்குளம் - 20, ஆழியாறு - 2.6, மேல்ஆழியாறு - 8, காடம்பாறை - 18, பெருவாரிப்பள்ளம் - 28, துாணக்கடவு - 21, வேட்டைக்காரன்புதுார் -16, சர்க்கார்பதி - 3, பொள்ளாச்சி - 18, என்ற அளவில் மழை பெய்தது.தீவிரமடையும்கோவை வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத்தின் அறிக்கை:பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, ஆனைமலை, கிணத்துக்கடவு ஒன்றியங்களில், 28ம் தேதி (இன்று) முதல், செப்., 2ம் தேதி வரை, கனமழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது. நான்கு ஒன்றியங்களிலும் குறைந்தபட்சமாக, ஐந்து மி.மீ., முதல் அதிகபட்சமாக, 38.8 மி.மீ., வரை, அதிவேக காற்றுடன் கனமழை பெய்யும்.அதிகபட்சமாக, 37.8 கி.மீ., வேகத்தில் காற்று வீசும். அதேசமயம், மழையில்லாத நாட்களில், 34.7 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை நிலவும். அதிவேக காற்றில், கரும்பு, வாழை மற்றும் மரப்பயிர்கள் சேதமடைவதை தவிர்க்க, முட்டு கொடுத்து பாதுகாக்க வேண்டும். மழை காரணமாக பயிர்களுக்கு உரமிடுவதையும், பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.கவனம் தேவைதிருப்பூர் கலெக்டர் வினீத் அறிக்கை:சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம், இன்று, 28ம் தேதி முதல் வரும் 31ம் தேதி வரை, திருப்பூர் உட்பட மாவட்டங்களில், கனமழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது. எனவே, மாவட்டத்துக்குட்பட்ட, அமராவதி ஆறு உட்பட ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில், வசிப்பவர்கள், விழிப்புடனும், முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.இந்நாட்களில், பொதுமக்கள் அவசியமின்றி வெளியில் வர வேண்டாம்; இடி பாதிப்புகள் அதிகளவில் இருக்கும். கனமழையினால், பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவானால், உடனடியாக, 1077 என்ற மாவட்ட கட்டுப்பாட்டு மைய எண்ணை, தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது. - நிருபர் குழு -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X