ரயில்வே பால ஓடுதளத்தில் கழிவுநீர்: சுகாதார பாதிப்பால் மக்கள் அதிருப்தி

Added : ஆக 28, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி குமரன் நகர் ரயில்வே பாலத்தில், கழிவுநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டுனர்கள் சிரமப்படுகின்றனர்.பொள்ளாச்சி நகராட்சி குமரன் நகர் பகுதியில் இருந்து, மீன்கரை ரோட்டுக்கு செல்லும் வழித்தடம் உள்ளது. இந்த வழித்தடத்தில், ரயில்வே தண்டவாளம் குறுக்கிடுவதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க, கடந்த சில ஆண்டுக்கு முன் பாலம்
 ரயில்வே பால ஓடுதளத்தில் கழிவுநீர்: சுகாதார பாதிப்பால் மக்கள் அதிருப்தி

பொள்ளாச்சி:பொள்ளாச்சி குமரன் நகர் ரயில்வே பாலத்தில், கழிவுநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டுனர்கள் சிரமப்படுகின்றனர்.பொள்ளாச்சி நகராட்சி குமரன் நகர் பகுதியில் இருந்து, மீன்கரை ரோட்டுக்கு செல்லும் வழித்தடம் உள்ளது. இந்த வழித்தடத்தில், ரயில்வே தண்டவாளம் குறுக்கிடுவதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க, கடந்த சில ஆண்டுக்கு முன் பாலம் கட்டப்பட்டது.இவ்வழியாக, குமரன் நகர் பகுதி மக்கள் மீன்கரை ரோட்டுக்கு சென்று வருகின்றனர். அங்கிருந்து வெளியேறும் கழிவுநீர், பாலத்தின் கீழ் ஓடுதள பகுதியில் தேங்கி குட்டை போல உள்ளது. மழைக்காலங்களில் மழைநீரும் தேங்கி விடுவதால் அவ்வழியாக வாகனங்கள் செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது.குட்டை போல கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. கழிவுநீர் தேங்குமிடம் கொசு உற்பத்தி மையமாக மாறியுள்ளது.கழிவுநீர் வடிகால்குமரன் நகரில் இருந்து வரும் கழிவுநீர், திறந்தவெளியில் செல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பாலத்தின் கீழ் கழிவுநீர் செல்ல வடிகால் அமைக்க வேண்டும். அதன் வாயிலாக, கழிவுநீர் செல்ல வசதி ஏற்படுத்தினால் பயனாக இருக்கும். நகர எல்லையில் உள்ள ரோட்டினை சீரமைக்க வேண்டும்.கோரிக்கை மனுமனிதநேய ஜனநாயக கட்சியினர், சப் - கலெக்டரிடம் கொடுத்த மனுவில், குமரன் நகர் ரயில்வே பாலத்தின் ஓடுதளத்தில் கழிவுநீரும், மழைக்காலங்களில் மழைநீரும் தேங்கி நிற்கிறது. இதனால், சுகாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது. வாகன ஓட்டுனர்கள் கழிவுநீரை கடந்து செல்ல வேண்டிய அவல நிலை நீடிப்பதுடன், விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே, நீண்ட கால இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்,' என, தெரிவித்துள்ளனர்.புகாரை தொடர்ந்து, கழிவுநீர் தேங்காமல் வெளியேற்றும் வகையில், குழாய் பதிக்கும் பணியில் நகராட்சி அதிகாரிகள் நேற்று ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X