பொது செய்தி

தமிழ்நாடு

ஆற்றில் கலக்குது கழிவுநீர் சுத்திகரிப்புக்கு கோரிக்கை

Added : ஆக 28, 2021
Share
Advertisement
உடுமலை:அமராவதி ஆறு கடந்து செல்லும் உள்ளாட்சி அமைப்புகளில், கழிவுநீர் சுத்திகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உடுமலை அடுத்த அமராவதி ஆறு, திருப்பூர், கரூர் மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. விளைநிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.ஆனால், ஒவ்வொரு முறையும், தண்ணீர் திறக்கப்படும்போதும், கரையை ஒட்டிய

உடுமலை:அமராவதி ஆறு கடந்து செல்லும் உள்ளாட்சி அமைப்புகளில், கழிவுநீர் சுத்திகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உடுமலை அடுத்த அமராவதி ஆறு, திருப்பூர், கரூர் மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. விளைநிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.ஆனால், ஒவ்வொரு முறையும், தண்ணீர் திறக்கப்படும்போதும், கரையை ஒட்டிய குடியிருப்பு பகுதிகளில் இருந்து, கழிவு நீர் வெளியேற்றப்பட்டு, ஆற்றில் கலந்து விடப்படுகிறது.பல ஆண்டுகளாக, இந்நிலை நீடித்து வருவதாக, விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். குடிநீருக்கான ஆற்று நீரில், கழிவு நீர் கலப்பதால், சில பகுதிகளில், அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.விவசாயிகள் கூறுகையில், 'தாராபுரம், மூலனுார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், ஆற்றில் மறைமுகமாக கலக்கப்படுகிறது. கண்காணிப்பு குழுவினர் அமைக்கப்பட்டும், இதனை தடுக்க முடியவில்லை. அதற்கு மாறாக, உள்ளாட்சி அமைப்புகளில், கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இதன் வாயிலாக, ஆற்றில் கழிவுநீர் கலக்கப்படுவது தடுக்கப்படும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X