பொது செய்தி

தமிழ்நாடு

மாட்டு சந்தைக்கு தற்காலிக தடை; ரூ.20 கோடி வர்த்தகம் பாதிப்பு

Added : ஆக 28, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
பொள்ளாச்சி;பொள்ளாச்சி மாட்டு சந்தை வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் நடக்கிறது. கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் மாடுகளை வாங்கிச் செல்கின்றனர்.கொரோனா பரவல் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, மாட்டு சந்தைக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த, ஆறு வாரமாக சந்தை செயல்படாததால் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாட்டு

பொள்ளாச்சி;பொள்ளாச்சி மாட்டு சந்தை வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் நடக்கிறது. கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் மாடுகளை வாங்கிச் செல்கின்றனர்.கொரோனா பரவல் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, மாட்டு சந்தைக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த, ஆறு வாரமாக சந்தை செயல்படாததால் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாட்டு வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பு சங்கத்தினர் கூறியதாவது:மாட்டு சந்தையை நம்பி, நேரடியாகவும், மறைமுகமாகவும், இரண்டாயிரம் குடும்பங்கள் உள்ளன. லாரி உரிமையாளர்கள், ஓட்டுனர், கிளீனர், வியாபாரிகள், வைக்கோல் வியாபாரம் செய்பவர்கள், தரகர்கள் என பலரது வாழ்வாதாரமாக மாட்டு சந்தையை நம்பி உள்ளது.இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக மாட்டு சந்தை செயல்பட மாவட்ட நிர்வாகம் தற்காலிக தடை விதித்துள்ளது. இதனால், இத்தொழிலை நம்பியுள்ளோர் சிரமப்படுகின்றனர்; 20 கோடி ரூபாய் வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.ஊரடங்கில் தளர்வுகளுடன் கூடிய சலுகைகள் வழங்கி பல்வேறு நிறுவனங்கள் செயல்பட அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து, வாரந்தோறும் இரு நாட்கள் மாட்டு சந்தை சந்தை செயல்பட அனுமதிக்க வேண்டும்.இது குறித்து சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் பரீசிலனை செய்து நடவடிக்கை எடுத்தால் பயனாக இருக்கும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-ஆக-202113:23:08 IST Report Abuse
Ram Pollachi எருமைகள் அதிகமாக விற்பனையாகிறது. செயல்படவில்லை என்பது ஏற்புடையதல்ல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X