சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி முற்றுகை

Added : ஆக 28, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி, குள்ளிச்செட்டிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கொங்கநாட்டன்புதுார் கிராம மக்கள், சப் - கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்தனர்.மனுவில் கூறியிருப்பதாவது:குள்ளிச்செட்டிபாளையம் ஊராட்சியில், ஆதிதிராவிடர்களும், பழங்குடியின மக்களும் அதிகளவு வசிக்கின்றனர். இவர்கள், இரண்டு ஏக்கர் நத்தம் புறம்போக்கு நிலத்தில் குடிசை அமைத்து வாழ்கின்றனர்.

பொள்ளாச்சி:பொள்ளாச்சி, குள்ளிச்செட்டிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கொங்கநாட்டன்புதுார் கிராம மக்கள், சப் - கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்தனர்.மனுவில் கூறியிருப்பதாவது:குள்ளிச்செட்டிபாளையம் ஊராட்சியில், ஆதிதிராவிடர்களும், பழங்குடியின மக்களும் அதிகளவு வசிக்கின்றனர். இவர்கள், இரண்டு ஏக்கர் நத்தம் புறம்போக்கு நிலத்தில் குடிசை அமைத்து வாழ்கின்றனர். இதேபோன்று, கொங்கநாட்டன்புதுாரில், நத்தம் புறம்போக்கு நிலம் மற்றும் வண்டிபாதை புறம்போக்கு நிலத்தில் சொந்த வீட்டு மனை இல்லாததால் குடிசை அமைத்து வசிக்கின்றனர்.வீட்டு மனை இல்லாதவர்களுக்கு, மனைப்பட்டா வழங்க வேண்டும். இதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டா வழங்கி, மத்திய, மாநில அரசு திட்டத்தில் வீடு கட்டித்தர வேண்டும். இவ்வாறு, தெரிவித்துள்ளனர்.சப் - கலெக்டர் கூறுகையில், ''மனுவை பரிசீலினை செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X