சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மலைத்தேனீக்கள் கொட்டி ஒருவர் பலி; 19 பேர் காயம்

Added : ஆக 28, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, மலைத்தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் இறந்தார்; 19 பேர் காயமடைந்தனர்.கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே அம்பராம்பாளையம் ஆற்றில், இறந்தவர்களுக்கு திதி கொடுக்க நேற்று மக்கள் வந்தனர். காலை, 9:00 மணிக்கு, திடீரென மலைத்தேனீக்கள் கூட்டமாக பறந்து வந்து, மக்களை சூழ்ந்து கொட்டியது. பலர் மயக்கமடைந்து கீழே விழுந்தனர்.தீயணைப்பு நிலை அலுவலர் புருஷோத்தமன்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, மலைத்தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் இறந்தார்; 19 பேர் காயமடைந்தனர்.கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே அம்பராம்பாளையம் ஆற்றில், இறந்தவர்களுக்கு திதி கொடுக்க நேற்று மக்கள் வந்தனர். காலை, 9:00 மணிக்கு, திடீரென மலைத்தேனீக்கள் கூட்டமாக பறந்து வந்து, மக்களை சூழ்ந்து கொட்டியது. பலர் மயக்கமடைந்து கீழே விழுந்தனர்.தீயணைப்பு நிலை அலுவலர் புருஷோத்தமன் தலைமையில் வீரர்கள், மயக்கமடைந்தவர்களையும், காயமடைந்தவர்களையும் மீட்டு, பொள்ளாச்சி அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.பொள்ளாச்சி குரும்பம்பாளையத்தை சேர்ந்த ரமேஷ்குமார்,29, சம்பவ இடத்திலேயே இறந்தார். அவரது குடும்பத்தினர், 9 பேர் உட்பட 19 பேர், மலைத்தேனீ கொட்டியதில் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில், நான்கு பேர்சிறுவர்கள்.பொள்ளாச்சி போலீசார் கூறுகையில், 'ஆற்றுப்படுகையில் மரத்தில் இருந்த மலைத்தேனீக்களின் கூடு கலைந்ததாலும், புகை மூட்டத்தாலும் அங்கு சூழ்ந்து மக்களை கொட்டியுள்ளது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-ஆக-202112:44:38 IST Report Abuse
Ram Pollachi சரக்கு போட்ட தைரியம் தேனீ கிட்ட எடுபடாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X