கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ரூ. 1.33 கோடி சுருட்டிய நபருக்கு 10 ஆண்டு சிறை: ரூ.1 கோடி அபராதம்

Added : ஆக 28, 2021
Share
Advertisement
கோவை;ஈமு நிறுவனம் நடத்தி 51 பேரிடம், 1.33 கோடி ரூபாய் மோசடி செய்த நபருக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து, கோவை கோர்ட் தீர்ப்பு வழங்கியது.ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் தொட்டிபாளையத்தை சேர்ந்தவர் தங்கவேலு, 46, இவர் தனது நண்பர் விஜயமங்கலம் கினிபாளையத்தை சேர்ந்த தனசேகரன், 36 உடன் இணைந்து, 2012 ம் ஆண்டு, விஜயமங்கலத்தில் ஈமு பண்ணை நிறுவனத்தை துவங்கினர்.நிறுவனத்தில், ரூ.1.5 லட்சம் முதலீடு

கோவை;ஈமு நிறுவனம் நடத்தி 51 பேரிடம், 1.33 கோடி ரூபாய் மோசடி செய்த நபருக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து, கோவை கோர்ட் தீர்ப்பு வழங்கியது.ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் தொட்டிபாளையத்தை சேர்ந்தவர் தங்கவேலு, 46, இவர் தனது நண்பர் விஜயமங்கலம் கினிபாளையத்தை சேர்ந்த தனசேகரன், 36 உடன் இணைந்து, 2012 ம் ஆண்டு, விஜயமங்கலத்தில் ஈமு பண்ணை நிறுவனத்தை துவங்கினர்.நிறுவனத்தில், ரூ.1.5 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.7,000 மற்றும், ரூ.6,000 போனஸ்; ரூ.2 லட்சம் முதலீடு செய்தால், மாதம், ரூ.10 ஆயிரம் மற்றும் ரூ.6,000 போனஸ் என, பல திட்டங்களை அறிவித்தனர்.இத்திட்டங்களில், பலர் முதலீடு செய்தனர். ஆனால், தங்கவேலு ஒரு சிலரை தவிர, பல முதலீட்டாளர்களுக்கு பணத்தை முறையாக வழங்கவில்லை. இதையடுத்து உடுமலை தும்பாலப்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன் உள்ளிட்ட பலர், ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர்.விசாரணையில், 51 முதலீட்டாளர்களிடம், ரூ1.33 கோடி மோசடி செய்தது தெரிந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். கோவை டான்பிட் கோர்ட்டில், வழக்கு நடந்து வந்தது. டான்பிட் நீதிமன்ற சிறப்பு நீதிபதி ரவி நேற்று தீர்ப்பு வழங்கினார்.தங்கவேலுவுக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ1.02 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. தனசேகரன் விடுதலை செய்யப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X