கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கோர்ட்டில் ஆஜராக வந்த மூவர்: துரத்தி சென்று தாக்கிய கும்பல்: கோவையில் பரபரப்பு

Added : ஆக 28, 2021
Share
Advertisement
கோவை;கொலை வழக்கில் ஆஜராக, கோவை கோர்ட்டுக்கு வந்த நபர்களை கும்பல் துரத்திச் சென்று கத்தியால் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.கோவை புலியகுளம் அம்மன்குளத்தை சேர்ந்தவர் நவீன்குமார், 30. புலியகுளம் பகுதியில், பொங்கல் விழாவை முன்னிட்டு நடந்த கபடி போட்டியில் வெளியூர் வீரர்களை விளையாட செய்தார். இதுகுறித்து ஏற்பட்ட தகராறில் நவீன்குமார் கொலை செய்யப்பட்டார்.இவ்வழக்கில்

கோவை;கொலை வழக்கில் ஆஜராக, கோவை கோர்ட்டுக்கு வந்த நபர்களை கும்பல் துரத்திச் சென்று கத்தியால் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.கோவை புலியகுளம் அம்மன்குளத்தை சேர்ந்தவர் நவீன்குமார், 30. புலியகுளம் பகுதியில், பொங்கல் விழாவை முன்னிட்டு நடந்த கபடி போட்டியில் வெளியூர் வீரர்களை விளையாட செய்தார்.
இதுகுறித்து ஏற்பட்ட தகராறில் நவீன்குமார் கொலை செய்யப்பட்டார்.இவ்வழக்கில் வடவள்ளியை சேர்ந்த விஜயகுமார்,23, ஹரிஹரன், 21, கண்ணன், 21 ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். வழக்கு விசாரணை கோவை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.ஜாமினில் விடுவிக்கப்பட்ட விஜயகுமார், ஹரிஹரன், கண்ணன் ஆகிய மூவரும் வழக்கில் ஆஜராக, நேற்று கோர்ட்டுக்கு வந்தனர்.

நீதிமன்றத்தில் ஆஜரான பின் மூவரும் வெளியே வந்தனர். அப்போது அங்கு நின்றிருந்த நவீன்குமாரின் நண்பர்கள் ஆறு பேர் கொண்ட கும்பல், மூவரையும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்க முயன்றனர்.இதையடுத்து, தப்பியோடிய நபர்களை கும்பல் துரத்தி சென்று கத்தியால் குத்தியது. இதில், விஜயகுமார், ஹரிஹரன் இருவரும் பலத்த காயமடைந்தனர். இருவருக்கும் கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.தாக்குதலில் ஈடுபட்ட ஒருவரை ரேஸ்கோர்ஸ் போலீசார் பிடித்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X