சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தங்கம் கடத்தல் கும்பல் சிக்குகிறது! தனிப்படை தீவிர விசாரணை

Added : ஆக 28, 2021
Share
Advertisement
திருப்பூர்;பல்லடம் அருகே இளைஞர் ஒருவர் கடத்தப்பட்ட விவகாரத்தில், தங்கம் கடத்தல் கும்பலுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி அடுத்த அம்மாபாளையத்தை சேர்ந்தவர் பாக்யலட்சுமி, 60; இவரது வீட்டில் வாடகைக்கு வசிப்பவர் மகேஸ்வரன், 33. நேற்றுமுன்தினம், பாக்யலட்சுமி, பேத்தியுடன் தாராபுரத்துக்கு காரில் சென்றார்; மகேஸ்வரன், காரை ஓட்டி
 தங்கம் கடத்தல் கும்பல் சிக்குகிறது! தனிப்படை தீவிர விசாரணை

திருப்பூர்;பல்லடம் அருகே இளைஞர் ஒருவர் கடத்தப்பட்ட விவகாரத்தில், தங்கம் கடத்தல் கும்பலுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி அடுத்த அம்மாபாளையத்தை சேர்ந்தவர் பாக்யலட்சுமி, 60; இவரது வீட்டில் வாடகைக்கு வசிப்பவர் மகேஸ்வரன், 33. நேற்றுமுன்தினம், பாக்யலட்சுமி, பேத்தியுடன் தாராபுரத்துக்கு காரில் சென்றார்; மகேஸ்வரன், காரை ஓட்டி சென்றுள்ளார். திருப்பூர் திரும்பிக்கொண்டிருந்தபோது, மூன்று கார்கள் பின்தொடர்ந்தன. பல்லடம் அருகே பெரும்பாளி என்ற இடத்தில், மூன்று கார்களில் வந்தவர்கள், காரை வழிமறித்து மகேஸ்வரனை, தாங்கள் வந்த காருக்குள் துாக்கிப்போட்டு, வேகமாக சென்றனர்.காருடன், தனித்து நின்ற பாக்யலட்சுமி திகைத்தார்; பல்லடம் போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரித்தனர். 'சிசிடிவி' வாயிலாக, கடத்தல் கும்பல் வந்த மூன்று கார்கள் குறித்த விவரத்தை போலீசார் திரட்டினர். சோதனைச்சாவடிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.உடுமலை அருகே மடத்துக்குளம் சோதனைச்சாவடியில், கடத்தல் கும்பல் வந்த காரை போலீசார் மறித்தபோது, கார் நிற்காமல் வேகமாக கடந்தது. போலீசார் காரைத் துரத்தி சென்றனர். திண்டுக்கல் மாவட்டம், கீரனுார் காவல் எல்லையில், காரை காட்டுப்பகுதிக்குள் விட்டுவிட்டு, கும்பல் தப்பியது.4 பேர் சிக்கினர்போலீஸ் தேடுதலில், அங்குள்ள செங்கல் சூளை பகுதியில், கடத்தப்பட்ட மகேஸ்வரன் மற்றும் மூன்று பேர் இருந்தனர். இதில், ஒருவர் மட்டும் தான் கடத்தல் கும்பலை சேர்ந்தவர். இருவர் மகேஸ்வரனை போன்றே, கும்பலால் கடத்தி வரப்பட்டவர்கள் என்று தெரியவந்தது. மேற்கு மண்டல ஐ.ஜி., சுதாகர், டி.ஐ.ஜி., முத்துசாமி, திருப்பூர் எஸ்.பி., செஷாங் சாய் மற்றும் போலீஸ் அதிகாரிகள், இவர்களிடம் விசாரணை நடத்தினர்.போலீசார் கூறியதாவது:கடத்தப்பட்ட மகேஸ்வரன், ராமநாதபுரத்தை சேர்ந்தவர். மேலும் கடத்தப்பட்ட இருவர், சிவகங்கையை சேர்ந்த வீரமணி கண்ணன், அழகர்சாமி என்பது தெரியவந்துள்ளது. மகேஸ்வரன், திருப்பூரில் சக்தி என்று தனது பெயரை கூறிவந்துள்ளார். கடந்த 2017ல் திருச்சியில் தங்கம் கடத்தல் தொடர்பான வழக்கில், இவர் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது.தங்கம் கடத்தல் விவகாரம் தொடர்பான பிரச்னையில்தான், மூவரையும், கடத்தல் கும்பல் கடத்தியுள்ளது. இலங்கையில் இருந்து இக்கும்பல் தங்கம் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளது. பெரிய வலைப்பின்னலுடன் கும்பல் உள்ளதால், டி.எஸ்.பி., வெற்றிச்செல்வன் தலைமையில், ஐந்து தனிப்படைகள் அமைத்து, தீவிர விசாரணை நடக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X