அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலின், கனிமொழிக்கு இலங்கை அகதிகள் நன்றி

Updated : ஆக 28, 2021 | Added : ஆக 28, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
தூத்துக்குடி: இலங்கை தமிழர்களின் முகாம்களில் மிகவும் பழுதடைந்துள்ள நிலையில் உள்ள 7 ஆயிரத்து 469 வீடுகள் 231 கோடியே 54 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக கட்டித்தரப்படும். மாணவர்களுக்கு கல்வி உதவி, இலவச காஸ் அடுப்பு என, பல்வேறு நலத்திட்டங்களை சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.அவரது அறிவிப்புக்கு தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் இலங்கை தமிழர்கள்
 முதல்வர் ஸ்டாலின், கனிமொழி, இலங்கை , அகதிகள்

தூத்துக்குடி: இலங்கை தமிழர்களின் முகாம்களில் மிகவும் பழுதடைந்துள்ள நிலையில் உள்ள 7 ஆயிரத்து 469 வீடுகள் 231 கோடியே 54 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக கட்டித்தரப்படும். மாணவர்களுக்கு கல்வி உதவி, இலவச காஸ் அடுப்பு என, பல்வேறு நலத்திட்டங்களை சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.அவரது அறிவிப்புக்கு தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் வரவேற்றுள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின், தி.மு.க., மகளிர் அணி செயலரும், துாத்துக்குடி எம்.பி., யுமான கனிமொழிக்கு, எட்டையாபுரம் தாப்பாத்தி இலங்கை அதிகள் முகாம் தலைவர் ஆனந்தராஜ் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளனர்.அக்கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

கடந்த ஜூன் மாதம் 22ம்தேதி கனிமொழி, தாப்பாத்தி இலங்கை அகதிகள் முகாமிற்கு வந்தார். கொரோனா நிவாரண பொருட்களை வழங்கினார்.
பின் வீடு, வீடாக சென்று மக்களின் குறைகளை கேட்டார். அவர்கள் வசிக்கும் வீடுகளையும் பார்வையிட்டார். அவர்கள் குறை தீர்க்கும் வண்ணம் அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தருவதாக வாக்குறுதி அளித்தார். எங்கள் கோரிக்கை மனுவை கனிமொழியிடம் தந்தோம். அவர் முதல்வர் ஸ்டாலினின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதி அளித்தார். அதன் அடிப்படையில் சட்டசபையில் இலங்கை அகதி மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழக வாழ் இலங்கை அகதிகள் முகாம் மக்கள் சார்பில் எங்கள் நன்றியை முதல்வர் ஸ்டாலின், கனிமொழி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA - chennai,இந்தியா
29-ஆக-202118:18:49 IST Report Abuse
SIVA நீங்க எல்லாம் அகதிகள் ஆனதே அவர்கள் மாதிரி ஆட்களால் தான்
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli,வலிமையான இந்திய கண்டம் ,இந்தியா
29-ஆக-202105:24:04 IST Report Abuse
NicoleThomson நன்றி அரசே , இதிலும் பணம் திருடலாம் என்று அலையும் கான்டராக்டர்களை கிடுக்கி பிடி கொண்டு தரமான வீடுகளை இவர்கள் பெற உதவுங்கள்
Rate this:
Cancel
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
29-ஆக-202102:24:09 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam அவசரப்பட்டு நன்றி சொல்வதால், பயனொன்றும் இல்லை. பொறுத்திருந்து பார்ப்போம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X