முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி கைது: குண்டுக்கட்டாக வேனில் ஏற்றினர்

Added : ஆக 28, 2021
Share
Advertisement
லக்னோ: உத்தர பிரதேசத்தில் பெண்ணை தற்கொலைக்கு துாண்டிய வழக்கில் கைதான முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரியை, போலீசார் குண்டுக்கட்டாக துாக்கிச்சென்று வேனில் ஏற்றும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.உத்தர பிரதேசத்தில் பணியில் இருந்த ஐ.பி.எஸ்., அதிகாரி அமிதாப் தாக்குர், முறையாக பணிகளை மேற்கொள்ளாததால் முன்கூட்டியே ஓய்வு பெற மார்ச், மாதம் மத்திய உள்துறை உத்தரவிட்டது.

லக்னோ: உத்தர பிரதேசத்தில் பெண்ணை தற்கொலைக்கு துாண்டிய வழக்கில் கைதான முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரியை, போலீசார் குண்டுக்கட்டாக துாக்கிச்சென்று வேனில் ஏற்றும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

உத்தர பிரதேசத்தில் பணியில் இருந்த ஐ.பி.எஸ்., அதிகாரி அமிதாப் தாக்குர், முறையாக பணிகளை மேற்கொள்ளாததால் முன்கூட்டியே ஓய்வு பெற மார்ச், மாதம் மத்திய உள்துறை உத்தரவிட்டது. இதன்படி, 2028ல் ஓய்வு பெற வேண்டிய அவர் முன்னதாக பணி விலகினார். இதனால் அவரது மனைவி நுாதன் தாக்குர், அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து போட்டியிடுவதாக சமீபத்தில் அறிவித்தார்.

சமீபத்தில் உச்ச நீதிமன்றம் முன், ஒரு ஆண் மற்றும், 24 வயது இளம்பெண் தீக்குளித்து இறந்தனர். அதற்கு முன், இளம்பெண் சமூக வலைதளங்களில் 'வீடியோ' வெளியிட்டார். அதில் அவரது குற்றச்சாட்டின் பேரில் சிறையில் இருக்கும் பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.பி., அதுல்ராய்க்கு ஆதரவாக, சில போலீஸ் உயர் அதிகாரிகள் செயல்படுவதாக கூறி இருந்தார். இதில் அமிதாப் தாக்குர் பெயரையும் அவர் கூறி உள்ளார்.

இந்நிலையில் நேற்று லக்னோவில் தன் புதிய கட்சியின் பெயரை அறிவித்த சிறிது நேரத்தில், தற்கொலைக்கு துாண்டுதல் வழக்கில் அமிதாப் தாக்குரை போலீசார் கைது செய்தனர். வீட்டில் அமிதாப்பை கைது செய்த போலீசார், வாகனத்திற்கு அழைத்து வந்தனர். அவர்களுடன் ஒத்துழைக்க மறுத்து அமிதாப் கடுமையாக முரண்டு பிடித்தார். பின் போலீசார் அவரை துாக்கிப்பிடித்து வாகனத்தில் ஏற்றினர். இந்த காட்சிகள் வீடியோவாக சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X