பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 136 நைஜீரிய மாணவர்கள் விடுவிப்பு

Updated : ஆக 28, 2021 | Added : ஆக 28, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
அபுஜா: மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கடந்த சில மாதங்களாக பள்ளிக்கூடங்களுக்குள் புகுந்து பயங்கரவாதிகளால் மாணவர்கள் கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பெற்றோர் கவலை அடைந்துள்ளனர்.அந்த வகையில் நைஜீரியாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள நைஜர் மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் இருந்து கடந்த மே மாதம் 30ம் தேதி 150க்கும் மேற்பட்ட மாணவர்களை
nijeeria, students, kidnap, terrorist, நைஜீரிய, மாணவர்கள், பயங்கரவாதிகள், விடுவிப்பு

அபுஜா: மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கடந்த சில மாதங்களாக பள்ளிக்கூடங்களுக்குள் புகுந்து பயங்கரவாதிகளால் மாணவர்கள் கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பெற்றோர் கவலை அடைந்துள்ளனர்.

அந்த வகையில் நைஜீரியாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள நைஜர் மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் இருந்து கடந்த மே மாதம் 30ம் தேதி 150க்கும் மேற்பட்ட மாணவர்களை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர். மாணவர்களை விடுவிக்க வேண்டும் என்றால், பிணைத் தொகையை வழங்க வேண்டும் என பயங்கரவாதிகள் கூறினர்.

இதையடுத்து மாணவர்களின் பெற்றோர் மற்றும் பள்ளிக்கூட நிர்வாகம் இணைந்து ஒரு குறிப்பிட்ட தொகையை தயார் செய்தது. ஆனால், அந்தத் தொகை போதுமானதாக இல்லை எனக் கூறி மாணவர்களை விடுவிக்க பயங்கரவாதிகள் மறுத்துவிட்டனர். அத்துடன் பிணைத்தொகையை வழங்கச் சென்ற ஒரு நபரையும் பயங்கரவாதிகள் கடத்தி வைத்துக் கொண்டனர்.


latest tamil newsஇதற்கிடையே, பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட மாணவர்களில் 6 பேர் உடல் நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டதாக அண்மையில் செய்தி வெளியானது. இது கடத்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியது. இதையடுத்து பயங்கரவாதிகளின் பிடியில் உள்ள மாணவர்களை விடுவிக்க உதவும்படி நைஜீரிய அரசுக்கு அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், பிணைக் கைதிகளாக வைத்திருந்த 136 மாணவர்களையும் பயங்கரவாதிகள் விடுவித்து விட்டதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார். மாணவர்கள் அனைவரும் பலவீனமாகவும், ஆரோக்கியமற்ற நிலையிலும் இருந்ததால் அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார். அதேவேளையில் மாணவர்களை மீட்க பயங்கரவாதிகளுக்கு பிணைத்தொகை வழங்கப்பட்டதா? என்பது குறித்து விளக்கமளிக்க அவர் மறுத்துவிட்டார்.

நைஜீரியாவில் கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து தற்போது வரை 1,000க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar - Madurai,இந்தியா
28-ஆக-202117:34:32 IST Report Abuse
Kumar "மார்க்க தீவிரவாத அமைப்போட பெயரை சொன்னால் தமிழகத்தில் இருக்குற பயங்கரவாதிகளுக்கு முட்டு கொடுக்க வசதியா இருக்கும் ." இவர்களுக்கு எதற்கு புதிய பெயர் மார்க்கம்னு சொன்னாலே ஒரு மார்க்கமானவர்கள் என்று எல்லோருக்கும் தெரியுமே? வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
28-ஆக-202115:51:53 IST Report Abuse
Natarajan Ramanathan திருப்பூர் போன்ற பகுதிகளில் இவர்கள் செய்யும் அட்டகாசம் மிகவும் அதிகம். இவர்களுக்கு அதிக வாடகைக்கு ஆசைப்பட்டு வீடு கொடுப்பவர்களை மக்களும், வியாபாரிகளும் புறக்கணிக்க வேண்டும்....
Rate this:
mathimandhiri - chennai,இந்தியா
28-ஆக-202119:12:14 IST Report Abuse
mathimandhiriபுறக்கணிப்பதாவது? பணம் பாதாளம் வரை பாயுது//// பிடித்து பொடாவில் உள்ளே வைக்க வேண்டும்//மத்திய அரசின் கண் திறக்குமா? திறக்காதா தெரிய வில்லை. தின மலர் போன்ற பொறுப்புள்ள இதழ்கள் ஏதாவது ஒரு முறையில் ஆதாரத்துடன் யார் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டுமோ கொண்டு சென்றால் பலனிருக்கும்///...
Rate this:
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
28-ஆக-202114:29:48 IST Report Abuse
Sanny இவங்களும் ஒருவகை தலிபான்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X