பொது செய்தி

இந்தியா

விவசாயிகளின் வருவாயையும் உயர்த்தும் தேசிய கோகுல் இயக்கம்

Added : ஆக 28, 2021
Share
Advertisement
சென்னை: ''தேசிய கோகுல் இயக்கம், அதிக உற்பத்திக்கு உதவுவதோடு மட்டுமில்லாமல், விவசாயிகளின் வருவாயையும் உயர்த்தும்,'' என, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.விடுதலையின் அம்ருத் மகோற்சவத்தின் ஒரு பகுதியாக, தொழில் முனைவுத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை, பொது சேவை மையங்களின் வாயிலாக, மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை நடத்தியது. நாடு

சென்னை: ''தேசிய கோகுல் இயக்கம், அதிக உற்பத்திக்கு உதவுவதோடு மட்டுமில்லாமல், விவசாயிகளின் வருவாயையும் உயர்த்தும்,'' என, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.

விடுதலையின் அம்ருத் மகோற்சவத்தின் ஒரு பகுதியாக, தொழில் முனைவுத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை, பொது சேவை மையங்களின் வாயிலாக, மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை நடத்தியது. நாடு முழுதும், கிராம அளவில், 2,000 முகாம்கள் நடத்தப்பட்டன. திட்டங்கள் குறித்தும், அவற்றுக்கான இணையதளங்களில் எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது குறித்தும், முகாமில் விளக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற விவசாயிகளிடம் பேசிய, மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, ''ஊரக தொழில் முனையங்களை உருவாக்கி, வேலையில்லாத இளைஞர்களுக்கும், ஆடு, மாடு வளர்க்கும் விவசாயிகளுக்கும் வாய்ப்புகளை வழங்கி, தற்சார்பு இந்தியாவுக்கு வழிவகுப்பதில், தேசிய கால்நடை இயக்கம் உதவும்,'' என்றார்.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசுகையில், ''விடுதலையின் அம்ரித் மகோற்சவம், இந்திய மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. தேசிய கோகுல் இயக்கம், அதிக உற்பத்திக்கு உதவுவதோடு மட்டுமில்லாமல், விவசாயிகளின் வருவாயையும் உயர்த்தும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X