சம்பவம் செய்தி

தமிழ்நாடு

20 முறை கத்தியால் குத்தி சித்தப்பா படுகொலை: இளைஞர் கைது

Added : ஆக 28, 2021
Share
Advertisement
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே 20 முறை கத்தியால் குத்தி சித்தப்பாவை கொலை செய்த இளைஞர் தனது தாயுடன் கைது செய்யப்பட்டார்.குலசேகரம் அருகே தும்பகோட்டையை சேர்ந்த வேலப்பன் மகன்கள் ராஜன் 44, சுரேஷ் 35. திருமணமாகி இருவரும் குடும்பத்துடன் தனித்தனியே வசிக்கின்றனர். ராஜன் வெளிநாட்டில் வேலை செய்கிறார். சமீபத்தில் இவர்களது தாயார் இறந்தார். நேற்று முன்தினம் இரவு ராஜன் வீட்டுக்கு

நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே 20 முறை கத்தியால் குத்தி சித்தப்பாவை கொலை செய்த இளைஞர் தனது தாயுடன் கைது செய்யப்பட்டார்.

குலசேகரம் அருகே தும்பகோட்டையை சேர்ந்த வேலப்பன் மகன்கள் ராஜன் 44, சுரேஷ் 35. திருமணமாகி இருவரும் குடும்பத்துடன் தனித்தனியே வசிக்கின்றனர். ராஜன் வெளிநாட்டில் வேலை செய்கிறார். சமீபத்தில் இவர்களது தாயார் இறந்தார். நேற்று முன்தினம் இரவு ராஜன் வீட்டுக்கு சென்ற சுரேஷ் குடிபோதையில் தகராறு செய்தார். ஆத்திரமடைந்த ராஜன் மனைவி விஜிலா 42, சுரேஷ் மீது வெந்நீர் ஊற்றினார். தொடர்ந்து தகாத வார்த்தையால் திட்டியதால் ராஜன் மகன் ரியாஸ் 19, சுரேைஷ 20 முறை கத்தியால் குத்தி கொலை செய்தார். குலசேகரம் போலீசார் வழக்குப்பதிந்து விஜிலா, ரியாஸ் ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X