சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வேலை தருவதாக ரூ.15 லட்சம் மோசடி: டில்லி தமிழர்கள் கைது

Added : ஆக 28, 2021
Share
Advertisement
தேனி: விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.15 லட்சம் மோசடி செய்த டில்லியை சேர்ந்த மூவரை கைது செய்த தேனி போலீசார் அலைபேசிகள், கம்ப்யூட்டர், ஏ.டி.எம். கார்டுகளை பறிமுதல் செய்தனர்.தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ஜம்புலிபுத்துார் மலைச்சாமி மனைவி சாரதா 31. பட்டதாரியான இவர் வேலை தேடுகிறார். சில மாதத்துக்கு முன் இவரது அலைபேசிக்கு 'வேலை வேண்டுமா' என
வேலை தருவதாக ரூ.15 லட்சம் மோசடி: டில்லி தமிழர்கள் கைது

தேனி: விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.15 லட்சம் மோசடி செய்த டில்லியை சேர்ந்த மூவரை கைது செய்த தேனி போலீசார் அலைபேசிகள், கம்ப்யூட்டர், ஏ.டி.எம். கார்டுகளை பறிமுதல் செய்தனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ஜம்புலிபுத்துார் மலைச்சாமி மனைவி சாரதா 31. பட்டதாரியான இவர் வேலை தேடுகிறார். சில மாதத்துக்கு முன் இவரது அலைபேசிக்கு 'வேலை வேண்டுமா' என எஸ்.எம்.எஸ். வந்தது. இதை நம்பி கல்வி தகுதி விபரங்களை சாரதா அனுப்பினார். இவரை தொடர்பு கொண்டவர் ''டில்லி ஏர்போர்ட்டில் வேலை செய்கிறேன். இங்கு கிரவுண்ட் ஹேண்ட்லிங் பணிக்கு தேர்வாகி உள்ளீர். முன்பணமாக ரூ. 2550 வங்கி கணக்கிற்கு அனுப்புங்கள்'' என்றார். சாரதா பணம் அனுப்பினார்.

பிறகு அசோக், விநாயக மூர்த்தி, ராஜாராம் என்ற பெயர்களில் பேசியவர்கள் பயிற்சி கட்டணம், தங்கும் வசதி, தொழில்நுட்ப கருவி பெறுதல், சம்பள கணக்கு துவக்கம் எனக் கூறி பணம் கேட்டனர். சாரதா பல தவணைகளில் ரூ.15 லட்சத்து 74 ஆயிரத்து 425யை வங்கி கணக்கிற்கு அனுப்பினார். நீண்டநாள் ஆகியும் வேலை கிடைக்காததால் மோசடி என்பதை உணர்ந்த சாரதா தேனி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் ஜூன் 16ல் ஆன்லைனில் புகாரளித்தார். அலைபேசி எண்கள், வங்கி கணக்கு விபரங்களை வைத்து போலீசார் விசாரித்தனர்.
டில்லிக்கு தனிப்படை

போடி டவுன் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் எஸ்.ஐ.க்கள் சுல்தான்பாட்ஷா, திவான் மைதீன், சிறப்பு எஸ்.ஐ.,க்கள் துரைராஜ், மணிகண்டன், போலீசார் உள்பட 11 பேர் டில்லி சென்றனர். சகுர்பூரில் உ.பி.யை சேர்ந்த கோவிந்தை 21, பிடித்து விசாரித்தனர். அவர் நேதாஜி சுபாஷ் பிளேஸ் என்ற இடத்தில் செயல்படும் கால்சென்டர் நடத்தும் விஜய் 29, ராம் சந்திரனை 33, அடையாளம் காட்டினார். அங்கு போலி வேலை வாய்ப்பு அலுவலகம் செயல்பட்டது தெரிந்தது.

அங்கிருந்த 31 அலைபேசிகள், லேப்-டாப், கம்ப்யூட்டர், பிரிண்டர், 46 ஏ.டி.எம். கார்டுகள், சிம்கார்டுகள், போலி நியமன உத்தரவுகள், செக்புக், ரூ.50 ஆயிரம் பறிமுதல் செய்தனர்.கோவிந்த், விஜய், ராம்சந்திரனை கைது செய்து தேனிக்கு அழைத்து வந்தனர். விஜய், ராம் சந்திரனுக்கு நாமக்கல் பூர்வீகம். இரு தலைமுறைகளாக டில்லியில் வசிக்கின்றனர். நன்கு தமிழ் பேசுவார்கள். இவர்கள் அலைபேசி, இணையம் மூலம் போலி வேலை வாய்ப்பு அறிவிப்புகளை அனுப்பி தமிழகத்தில் 20 மாவட்டங்களில் பலரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்தது தெரியவந்துள்ளது. மூவரையும் தேனி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

விழிப்புணர்வு தேவை

தேனி எஸ்.பி., பிரவீன் உமேஷ் டோங்ரே கூறுகையில், ''பொதுமக்கள் இதுபோன்ற போலி நிறுவனங்களை நம்பி விபரங்களை அளிக்க வேண்டாம். வேலை வழங்கும் பெரிய நிறுவனங்கள் பணம் வசூலிப்பது இல்லை. இணையதள மோசடியில் ஏமாற வேண்டாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். போலி அழைப்புகள் எஸ்.எம்.எஸ்., வந்தால் புகார் அளிக்க வேண்டும்'' என்றார்.

விமானத்தில் சுற்றுலா

கைதானவர்கள் மோசடிக்கு 40-50 அலைபேசிகளை பயன்படுத்தியுள்ளனர். யாரிடம் எந்த அலைபேசியில் பேசுகிறோம் என்பதை குழப்பமின்றி அறிய அவற்றில் பெயர் ஒட்டி வைத்துள்ளனர். கைதான விஜய் டில்லி சார்ட்டர்ட் அக்கவுண்ட் ஆபீசில் உதவியாளராக வேலை செய்தார். பணப்பரிவர்த்தனை பற்றி நன்கு அறிந்திருந்ததால் வேலைகோரி வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பினால் உடனடியாக அதை எடுத்துவிடுவார். வேலை வேண்டுமா என மொத்தமாக எஸ்.எம்.எஸ்., அனுப்பி பதில் அளிப்பவர்களிடம் பல்வேறு பெயரில் பணம் வசூலித்தவர்கள் ஆடம்பரமாக விமானத்தில் சுற்றுலா சென்றுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X