புதிய மனித மரபணு: 7,200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பெண்ணின் டி.என்.ஏ.,வில் கண்டுபிடிப்பு

Updated : ஆக 28, 2021 | Added : ஆக 28, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
ஜகார்த்தா: இந்தோனேசியாவில் 7,200 ஆண்டுகளுக்கு முன்பு வேட்டையாடி வாழ்ந்த பெண்ணின் எலும்புகளிலிருந்து, புதிய மனித மரபணுவை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.இந்தோனேசியா மற்றும் சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் ஒன்றிணைந்து தெற்கு சுலாவேசி பகுதியில் 2015ம் ஆண்டு முதல் நடத்திய அகழாய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. ஆராய்ச்சியை முன்னின்று நடத்திய தொல்பொருள்

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் 7,200 ஆண்டுகளுக்கு முன்பு வேட்டையாடி வாழ்ந்த பெண்ணின் எலும்புகளிலிருந்து, புதிய மனித மரபணுவை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.



latest tamil news




இந்தோனேசியா மற்றும் சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் ஒன்றிணைந்து தெற்கு சுலாவேசி பகுதியில் 2015ம் ஆண்டு முதல் நடத்திய அகழாய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. ஆராய்ச்சியை முன்னின்று நடத்திய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான ஆடம் ப்ரூம் தெரிவித்து உள்ளதாவது:


latest tamil news



தெற்கு சுலாவேசி பகுதியின் முதல் நாகரிகமாக டோலியன் மக்கள் கருதப்படுகின்றனர். தெற்கு சுலாவேசியில் சுண்ணாம்பு குகையில் கண்டெடுக்கப்பட்ட 17 அல்லது 18 வயது இளம் பெண்ணின் எலும்புகள் ஒப்பீட்டளவில் சேதமாகாமல் இருந்தது. வேட்டையாடி வாழ்ந்த அப்பெண்ணின் சடலம், வயிற்றுக்குள் குழந்தை படுத்திருப்பது போன்ற நிலையில் புதைக்கப்பட்டு இருந்தது.


latest tamil news



பெண்ணின் எலும்புகளிலிருந்து புதிய மனித மரபணு கண்டறியப்பட்டு உள்ளது. உலகில் வேறு எந்த பகுதிகளிலும் கண்டுபிடிக்கப்படாத இந்த மனித மரபணு, தனித்துவமானது. ஈரப்பதமான வெப்ப மண்டல வானிலையில் டிஎன்ஏக்கள் எளிதாக அழுகிவிடும். பண்டைய கால மனிதர்களின் டிஎன்ஏ கண்டுபிடிப்பது அரிதான ஒன்று. எனவேதான், இதை மிகவும் அதிர்ஷ்டமான கண்டுபிடிப்பாக கருதுகிறோம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
28-ஆக-202116:43:44 IST Report Abuse
jayvee அப்படின்னா கல் தோன்றி மண்தோன்றாக்காலத்திற்கு முன்புஇருந்தே என்று கதை கட்டும் நம்ம ஊரு அரசியல் மற்றும் அரசியல் மதம் சார்ந்த ஸ்பீக்கர் வாய்களுக்கு இனி மன்னுதான்
Rate this:
Cancel
பச்சையப்பன் கோபால் புரம். நிச்சயம் இது புவியை மரத்தால் விரட்டியடித்த வீரத் தமிழிச்சியாக இருக்கக்கூடும்.உடணடியாக கல்வி அமிச்சர் தலைமையில் தமிழறிஞர் குழு என்று அந்த இடத்துக்கு போய் ஆய்வு நடத்தி மரத் தமிழனின் பெருமையை உலகுக்கு எடுத்துக் கூற வேண்டும்.
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
28-ஆக-202115:15:48 IST Report Abuse
DVRR அப்போ அந்த பெண் அனாயாசமாக பறந்து பறந்து சென்றிருப்பாள் என்று தோன்றுகின்றது ஆகவே தான் டி என் ஏ மாற்றம் என்று ஒரு முனைவர் பட்டத்துக்காக கட்டுரை 10 வருடம் கழித்து வரும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X