அரசியல் செய்தி

தமிழ்நாடு

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம்: அண்ணாமலை விமர்சனம்

Updated : ஆக 28, 2021 | Added : ஆக 28, 2021 | கருத்துகள் (49)
Share
Advertisement
சென்னை: ‛‛வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவது அறிவாலயத்தின் கண்துடைப்பு நாடகம்,'' என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும்
AGRI, TAMILNADU GOVT, ASSEMBLY, ANNAMALI, BJP, வேளாண் மசோதா, சட்டசபை, அண்ணாமலை, விமர்சனம்

சென்னை: ‛‛வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவது அறிவாலயத்தின் கண்துடைப்பு நாடகம்,'' என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் விவசாயிகளுக்கு எதிரானவை, கார்ப்பரேட்கள், தனியார்களுக்குச் சாதகமானவை, விவசாயத்தை அழிப்பது, நாட்டின் உணவுப் பாதுகாப்பை அழிப்பது என்று கூறி விவசாயிகள் டில்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தச் சட்டத்துக்கு தி.மு.க. ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வந்தது. தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையிலும், தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்தது.


latest tamil news



அதன்படி, இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின், வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றினார். இதற்கு பா.ம.க., காங்கிரஸ், ம.தி.மு.க., வி.சி.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. பா.ஜ.க.,வும் அ.தி.மு.க.,வும் வெளிநடப்பு செய்துள்ளன.

இதுகுறித்து பா.ஜ.க., தமிழ் மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
‛‛மத்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராகத் தி.மு.க., அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இந்தத் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. எம்.எல்.ஏ.,க்கள் இன்று வெளிநடப்பு செய்துள்ளனர். தமிழக விவசாயிகள் எவரும் இந்தச் சட்டங்களை எதிர்க்காது, மகிழ்ச்சியுடன் வரவேற்கும்போது, ​​தமிழக மக்களுக்கு இது அறிவாலயத்தின் கண்துடைப்பு நாடகம் என்று தெரியும்,'' என்று தெரிவித்துள்ளார்.


Advertisement




வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamil -  ( Posted via: Dinamalar Android App )
28-ஆக-202121:06:11 IST Report Abuse
Tamil Ivan ellam oru aalunnu.
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
28-ஆக-202120:59:33 IST Report Abuse
vbs manian வேளாண் சட்ட எதிர்ப்பு பஞ்சாபி ஹரியானா உத்தர பிரதேசத்தில் மட்டுமே. பெரும்பாலான மாநிலங்களில் எதிர்ப்பு இல்லை.அடிமாட்டு விலைக்கு தரகர்கள் வாங்கி கொள்ளை லாபம் பார்க்கிறார்கள்.அகழி தள் பவார் கட்சி இந்தியா முழுதுக்கும் தரகர்கள்.மராட்டியத்தில் வெங்காயம் சாலையில் கொட்டிய பொது பவார் கட்சி ஒன்றும் செய்யவில்லை.. பஞ்சாபி விவசாயிகள் உலகிலேயே பணக்காரர் என்று சொல்கின்றனர். வெளி நாடுகளில் மோட்டல்கள் அசையாத சொத்து கொழிக்கிறது. இதெல்லாம் பறி போய் விடுமே என்ற பயமே. இந்த பணக்கார விவசாயி அறுபது சதா மானியத்தை எடுத்து கொள்கிறான். ஏழை விவசாயி இந்தியாவெங்கும் வரவேற்கின்றனர்.
Rate this:
Cancel
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
28-ஆக-202120:03:46 IST Report Abuse
Dhurvesh உனக்கு இதெற்கெல்லாம் நேரம் இருக்கா ,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X