பொது செய்தி

தமிழ்நாடு

வேலூர் கோட்டையில் மீண்டும் துவங்கிய குதிரை சவாரி

Added : ஆக 28, 2021
Share
Advertisement
வேலுார்: ஊரடங்கு தளர்வுகள் காரணமாக வேலுார் கோட்டையில் மீண்டும் குதிரை சவாரி தொடங்கியதால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.வேலுார் மாவட்டம், வேலுார் மத்திய பகுதியில் சரித்திரப் புகழ் பெற்ற கோட்டை உள்ளது. இந்திய சுதந்திரத்திற்கு வித்திட்ட சிப்பாய் புரட்சி இங்கு தான் நடந்தது. தற்போது தொல் பொருள் ஆய்வுத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஸ்மார்ட் சிட்டி
வேலூர் கோட்டையில் மீண்டும் துவங்கிய குதிரை சவாரி

வேலுார்: ஊரடங்கு தளர்வுகள் காரணமாக வேலுார் கோட்டையில் மீண்டும் குதிரை சவாரி தொடங்கியதால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வேலுார் மாவட்டம், வேலுார் மத்திய பகுதியில் சரித்திரப் புகழ் பெற்ற கோட்டை உள்ளது. இந்திய சுதந்திரத்திற்கு வித்திட்ட சிப்பாய் புரட்சி இங்கு தான் நடந்தது. தற்போது தொல் பொருள் ஆய்வுத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 30 கோடி ரூபாய் செலவில் கோட்டை புதுப்பிக்கும் பணிகள் தொடங்கியுள்ளது.
கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக கடந்த 4 மாதமாக வேலுார் கோட்டை மூடப்பட்டது. இதனால் கோட்டையில் குதிரை சவாரி, ரேக்ளா வண்டியில் சுற்றிப் பார்ப்பது நிறுத்தப்பட்டது. கொரோனா ஊரடங்கு தளர்வு காரணாக மீண்டும் கோட்டை திறக்க தமிழக அரசு அனுமதிக்கப்பட்டது. இதையடுத்து கோட்டை முழுவதும் சுத்தப்படுத்தப்பட்டு கடந்த 25ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது.
இன்று முதல் குதிரை சவாரி, ரேக்ளா வண்டியில் கோட்டையை சுற்றிப் பார்க்கும் நிகழ்ச்சிகள் மீண்டும் தொடங்கியது. இதன்படி, குதிரையில் கோட்டை முழுவதும் சுற்றிப் பார்க்கலாம். இதற்கு ஒரு நபருக்கு கட்டணம் 30 ரூபாய். அதேபோல ரேக்ளா வண்டியில் கோட்டையை சுற்றிப் பார்க்க ஒருவருக்கு 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றனர்.
இதற்காக கோட்டையில் 20 குதிரைகள், 10 ரேக்ளா வண்டிகள் உள்ளன. இதை நம்பி 50க்கும் மேற்பட்டவர்கள் பிழைத்து வருகின்றனர். 20 நிமிடத்தில் கோட்டையைச் சுற்றி காண்பித்து விடுகின்றனர். அதே போல கோட்டை மதில் சுவர் மீது ஏறி சுற்றிப் பார்ப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கோட்டை பழையபடி சுற்றுலாப்பயணிகளால் களை கட்டியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X