பொது செய்தி

தமிழ்நாடு

செஸ் போட்டியில் சாதனை படைத்த சிறுவனுக்கு பாராட்டு விழா

Added : ஆக 28, 2021
Share
Advertisement
வேலுார்: சதுரங்கப் போட்டியில் சாதனை படைத்த வேலுாரைச் சேர்ந்த 7 வயது சிறுவனுக்கு பாராட்டு விழா நடந்தது.வேலுாரைச் சேர்ந்தவர் பிரவீன் குமார், வித்யா வர்சினி தம்பதியினரின் மகன் மிதுன் பிரணன், 7. இவர் இங்குள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். சிறு வயதிலேயே சதுரங்கப் போட்டியில் பயிற்சி பெற்ற மிதுன் பிரணன் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பரிசுகள்
செஸ் போட்டியில் சாதனை படைத்த சிறுவனுக்கு பாராட்டு விழா

வேலுார்: சதுரங்கப் போட்டியில் சாதனை படைத்த வேலுாரைச் சேர்ந்த 7 வயது சிறுவனுக்கு பாராட்டு விழா நடந்தது.
வேலுாரைச் சேர்ந்தவர் பிரவீன் குமார், வித்யா வர்சினி தம்பதியினரின் மகன் மிதுன் பிரணன், 7. இவர் இங்குள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். சிறு வயதிலேயே சதுரங்கப் போட்டியில் பயிற்சி பெற்ற மிதுன் பிரணன் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றுள்ளார்.
அதன்படி, கடந்த 2019ம் ஆண்டு மலேசியாவில் உலக செஸ் கூட்டமைப்பு சார்பில், நடந்த போட்டியில் 1,047 புள்ளிகள் எடுத்து இளைய அதிரடி சதுரங்க தர வரிசை வீரர் என்ற விருதை பெற்றார். கடந்தாண்டு 64 போட்டிகளை ஆன் லைனில் விளையாடி ஆசிய புக் ஆப் ரெக்காட்ஸ் சாதனை புத்தகத்தில் சிறுவன் மிதுன் பிரணன் இடம் பெற்றார்.
கடந்த மாதம் 21ம் தேதி தேசிய அளவிலான 9 வயதுக்குப்பட்டவர்கள் சதுரங்கப் போட்டியில் பங்கேற்று 7வது இடத்தை பெற்றார். 31ம் தேதி பிலிப்பைன்ஸ் சதுரங்க கூட்டமைப்பு ஜூம் செயிலி மூலம் நடத்திய போட்டியில் 26 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்றார். அதே நாட்டில் தனி நபர் பிரிவிலும் பங்கேற்று 7வது இடத்தை பெற்றார்.
சாதனைகள் படைத்த மிதுன் பிரணனுக்கு பாராட்டு விழா ஆன் லைனில் இன்று நடந்தது. ராய வேலுார் சதுரங்க சங்க தலைவரும், சதுரங்க பயிற்சியாளருமான தினகரன் பங்கேற்று மிதுன் பிரணனுக்கு பாராட்டு தெரிவித்தார்.தற்போது அடுத்த மாதம் மலேசியா, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகளில் நடக்க உள்ள சதுரங்கப் போட்டியில் பங்கேற்ற உள்ள மிதுன் பிரணன் அதற்கான பயிற்சியை சிங்கப்பூரில் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X