பாராலிம்பிக்: இறுதிப்போட்டியில் பவினாபென்: பிரதமர் வாழ்த்து

Updated : ஆக 28, 2021 | Added : ஆக 28, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
டோக்கியோ: டோக்கியோவில் நடக்கும் பாராலிம்பிக் போட்டியில் டேபிள் டென்னிசில் இறுதிப்போட்டிக்கு இந்தியாவின் பவினாபென் தகுதி பெற்று சாதனை படைத்துள்ளார். அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராலிம்பிக் போட்டி நடக்கிறது. இதில், இந்தியா சார்பில் 54 பேர் பங்கேற்கின்றனர். பெண்களுக்கான டேபிள்
BhavinaPatel,Paralympics,TableTennis,1st Indian, Class 4

டோக்கியோ: டோக்கியோவில் நடக்கும் பாராலிம்பிக் போட்டியில் டேபிள் டென்னிசில் இறுதிப்போட்டிக்கு இந்தியாவின் பவினாபென் தகுதி பெற்று சாதனை படைத்துள்ளார். அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராலிம்பிக் போட்டி நடக்கிறது. இதில், இந்தியா சார்பில் 54 பேர் பங்கேற்கின்றனர். பெண்களுக்கான டேபிள் டென்னிஸ் தனிநபர் ('கிளாஸ் 4') போட்டியில் உலகின் 'நம்பர்-12' இடத்திலுள்ள இந்தியாவின் பவினாபென் 34, 'ஏ' பிரிவில் இடம் பெற்றார். நேற்று நடந்த காலிறுதியில் வெற்றி பெற்ற பவீனா அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.


latest tamil news



அரையிறுதியில், சீனாவின் மியோ ஷாங்கை எதிர்கொண்டார் பவினா, 34 நிமிடங்கள் நடந்த இந்த போட்டியில் , 7--11, 11-7, 11-4, 9-11, 11-8 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் பவினா தங்கம் வெல்லும் வாய்ப்பை பெற்றுள்ளார். இறுதிப்போட்டி நாளை நடக்கிறது. அதில், உலக சாம்பியன் யிங் ஜோவை எதிர்கொள்கிறார். அதில், பவினா வெற்றி பெற்று தங்கம் வெல்ல வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.


பிரதமர் வாழ்த்து


latest tamil news



பவினா பென்னுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவு: பவினாவுக்கு வாழ்த்துகள். சிறந்த முறையில் விளையாடியுள்ளீர்கள். உங்களுடைய வெற்றிக்காக மொத்த நாடும் வேண்டி கொள்கிறது. நாளை, நாடு உங்களை கொண்டாடும். சிறந்த முறையில், எவ்வித நெருக்கடியும் இன்றி விளையாடுங்கள். உங்களுடைய திறமையான விளையாட்டு, ஒட்டு மொத்த நாட்டிற்கும் ஊக்கம் அளிக்கும் வகையில் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-ஆக-202116:40:03 IST Report Abuse
அப்புசாமி அப்போ வெள்ளியோட சரி.
Rate this:
Cancel
Kumar - Madurai,இந்தியா
28-ஆக-202116:27:17 IST Report Abuse
Kumar வாழ்த்துகள் என் சகோதரியே. வாழ்க வளமுடன்.வாழ்க வஒயகம்.
Rate this:
Cancel
DINAKARAN S - Debrezeit/ Bishoftu,எத்தியோப்பியா
28-ஆக-202115:48:44 IST Report Abuse
DINAKARAN S உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி ..அதே சமயம் உங்களை போன்றோர் வாழ்த்துக்களால் விளையாடுபவர் மீது மன அழுத்தம் செலுத்தப்படுகிறது ..தவிர்ப்பது அவர்கள் சிறப்பாக விளையாட உதவும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X