பொது செய்தி

தமிழ்நாடு

3,000 அங்கன்வாடி மையங்களில் அதிகாரிகள் ஆய்வு

Added : ஆக 28, 2021
Share
Advertisement
வேலுார்: வேலுார் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில், உள்ள 3 ஆயிரம் அங்கன்வாடி மையங்களில் அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டன. ஊரடங்கு தளர்வுக்கு பின் செப்., 1ம் தேதி முதல் மீண்டும் அங்கன்வாடி மையங்கள் செயல்பட தமிழக அரசு உத்தரவிட்டது.இதையடுத்து மையங்களில் அடிப்படை

வேலுார்: வேலுார் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில், உள்ள 3 ஆயிரம் அங்கன்வாடி மையங்களில் அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டன. ஊரடங்கு தளர்வுக்கு பின் செப்., 1ம் தேதி முதல் மீண்டும் அங்கன்வாடி மையங்கள் செயல்பட தமிழக அரசு உத்தரவிட்டது.இதையடுத்து மையங்களில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்ய அரசு உத்தரவிட்டது.
வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார் மாவட்டங்களில் 3,000 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இங்கு மின்சாரம், குடிநீர், கழிவறை வசதிகள் உள்ளதா? என அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இது குறித்து குழந்தைகள் வளர்ச்சி மாவட்ட திட்ட அலுவலர் கோமதி கூறியதாவது: அனைத்து அங்கன்வாடி மையங்களையும் கிரிமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும். அதிகாரிகள் அனைத்து மையங்களையும் ஆய்வு செய்து ஏதேனும் குறைகள் இருந்தால் வரும் 31ம் தேதிக்குள் சரி செய்து விட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X