அரசியல் செய்தி

தமிழ்நாடு

புகழ்ந்து பேசினால் நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை

Updated : ஆக 28, 2021 | Added : ஆக 28, 2021 | கருத்துகள் (63)
Share
Advertisement
சென்னை: சட்டசபையில், தன்னை புகழ்ந்து பேசும் எம்எல்ஏ.,க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.சட்டசபையில், நேற்று சட்டத்துறை அமைச்சர், சட்ட முன்வடிவை அறிமுகம் செய்யும் முன், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, தற்போதைய முதல்வர் ஸ்டாலின் ஆகியோருக்கு புகழாரம் சூட்டினார்.அப்போது, முதல்வர் ஸ்டாலின் குறுக்கிட்டு பேசியதாவது: அமைச்சர் சட்ட
dmk, stalin, mkstalin, assembly, MLA, ஸ்டாலின், முதல்வர் ஸ்டாலின், எச்சரிக்கை

சென்னை: சட்டசபையில், தன்னை புகழ்ந்து பேசும் எம்எல்ஏ.,க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சட்டசபையில், நேற்று சட்டத்துறை அமைச்சர், சட்ட முன்வடிவை அறிமுகம் செய்யும் முன், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, தற்போதைய முதல்வர் ஸ்டாலின் ஆகியோருக்கு புகழாரம் சூட்டினார்.

அப்போது, முதல்வர் ஸ்டாலின் குறுக்கிட்டு பேசியதாவது: அமைச்சர் சட்ட முன்வடிவை அறிமுகம் செய்ய, நேரடியாக வர வேண்டும். பதில் அளித்து பேசும் போது, சில வார்த்தைகளை சேர்த்துக் கொள்ளலாம். தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு அமைச்சர்களுக்கு கண்டிப்பான வேண்டுகோள். பதிலுரையின் போது, உங்களை ஆளாக்கிய, உருவாக்கிய முன்னோடிகளுக்கு வணக்கம் செலுத்தி பேசுவது முறை. கேள்வி நேரத்தின் போதும், சட்ட முன்வடிவு அறிமுகப்படுத்தும் போதும், அதை பயன்படுத்தக் கூடாது.நேரத்தின் அருமையை பார்க்க வேண்டும். ஒவ்வொரு முறையும், நான் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. இங்கிருக்கும் அமைச்சர்களுக்கு, ஆளும் கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு, இது தான் என் கட்டளை. இவ்வாறு அவர் பேசினார்.


latest tamil news




இந்நிலையில், இன்று மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் போது தி.மு.க. எம்.எல்.ஏ., ஐய்யப்பன், முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து பேசினார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து சட்டசபையில் ஸ்டாலின் பேசியதாவது: சட்டசபையில் பேசும் ஆளுங்கட்சி எம்எல்ஏ.,க்கள் நேரத்தின் அருமை கருதி என்னை பற்றி புகழ்ந்து பேசுவதை தவிர்க்க வேண்டும். மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் தன்னை புகழ்ந்து பேசினால், தி.மு.க. எம்.எல்.ஏ.,க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நேற்றே அவை நேரத்தை வீண்டிக்க வேண்டாம் என எச்சரித்தேன். எதையும் அளவோடு வைத்துக் கொள்ளுங்கள். நேற்றே இது தொடர்பாக கட்டளையிட்டேன். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (63)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ganesh -  ( Posted via: Dinamalar Android App )
29-ஆக-202111:44:47 IST Report Abuse
Ganesh ஆமாம் எல்லோரும் என் மகனைத் தான் புகழவேண்டும். கும்பிடு போடவேண்டும். போட்டோ வைத்து வழிபடவேண்டும்
Rate this:
Cancel
RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
29-ஆக-202104:38:54 IST Report Abuse
RaajaRaja Cholan ஓட்டுறானுங்க அப்படின்னு கண்டு பிடிச்சிட்டார் , அப்புறம் ஒரு அளவில்லாம ஓட்ட அவரு என்ன இதுவா . ரெண்டு நாளைக்கு முன்னாடி யாரோ ஒரு ஆளு உங்களுக்கு பிரதமர் ஆக தகுதி இருக்குன்னு ஓட்டோ ஓட்டுன்னு ஒட்டி இருக்கான் , அவரும் பாவம் தானே ,
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
28-ஆக-202120:24:05 IST Report Abuse
Ramesh Sargam அடுத்த முறை அவர்கள் மேலும் கைதட்டி புகழ்ந்து சட்டசபையை அதிரவிட வேண்டும் என்று நாசூக்காக குறிப்பிடுகிறார். அவ்வளவுதான்.
Rate this:
Thamarai Moorthy.C.V. - Pattukkottai,இந்தியா
29-ஆக-202108:43:41 IST Report Abuse
Thamarai Moorthy.C.V.ரமேஷ் கண்டுபுடித்துவிட்டார், உங்கள் கண்டு பிடிப்புக்கு என் பாராட்டு....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X