தடுப்பூசி முகாம் விவகாரம் தி.மு.க., - அ.தி.மு.க., மோதல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி முகாம் விவகாரம் தி.மு.க., - அ.தி.மு.க., மோதல்

Added : ஆக 28, 2021
Share
திருப்பூர்: தடுப்பூசி முகாம் விவகாரம் தொடர்பாக, திருப்பூரில் போலீஸ் ஸ்டேஷனை அ.தி.மு.க.,வினர் முற்றுகையிட்டனர்.கடந்த 23ம் தேதி, திருப்பூரில் ஒரு பள்ளியில் தடுப்பூசி முகாம் நடந்தது. வட மாநில தொழிலாளர்கள் சிலரை, தி.மு.க.,வினர் அழைத்து வந்தனர். இதை அங்கிருந்த அ.தி.மு.க.,வினர் தடுத்தனர்.இரு தரப்பிடையே ஏற்பட்ட பிரச்னையை அடுத்து, அங்கிருந்த சுகாதார பிரிவு ஊழியர்கள், 'உரிய
தடுப்பூசி முகாம் விவகாரம் தி.மு.க., - அ.தி.மு.க., மோதல்

திருப்பூர்: தடுப்பூசி முகாம் விவகாரம் தொடர்பாக, திருப்பூரில் போலீஸ் ஸ்டேஷனை அ.தி.மு.க.,வினர் முற்றுகையிட்டனர்.கடந்த 23ம் தேதி, திருப்பூரில் ஒரு பள்ளியில் தடுப்பூசி முகாம் நடந்தது.

வட மாநில தொழிலாளர்கள் சிலரை, தி.மு.க.,வினர் அழைத்து வந்தனர். இதை அங்கிருந்த அ.தி.மு.க.,வினர் தடுத்தனர்.இரு தரப்பிடையே ஏற்பட்ட பிரச்னையை அடுத்து, அங்கிருந்த சுகாதார பிரிவு ஊழியர்கள், 'உரிய ஓட்டுச்சாவடி வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் தடுப்பூசி வழங்க முடியாது' என திருப்பி அனுப்பினர். இதுதொடர்பாக தி.மு.க.,வை சேர்ந்த துரை ரவிச்சந்திரன் என்பவர், அ.தி.மு.க.வைச் சேர்ந்த சரவணன் மீது தெற்கு போலீசில் புகார் செய்தார்.

இந்த தகவல் அறிந்து அ.தி.மு.க.,வினர் போலீஸ் ஸ்டேஷனில் திரண்டனர். சிறிது நேரத்துக்குப் பின் தி.மு.க.,வினரும் அங்கு வந்தனர்.தடுப்பூசி போடும் பணியில் இடையூறு செய்ததாக தி.மு.க.,வினர் மீது அ.தி.மு.க.,வினர் புகார் அளித்தனர். 'தடுப்பூசி முகாம் பட்டியலை சரி பார்த்து இரு தரப்பு புகார்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்' என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து இரு தரப்பினரும் அங்கிருந்து கலைந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X