பொது செய்தி

தமிழ்நாடு

சுங்கச்சாவடி அமைக்கக்கூடாது: இந்திய குடியரசு கட்சி

Added : ஆக 28, 2021
Share
Advertisement
வேலுார்: காட்பாடி முதல் குடியாத்தம் வரை புதியதாக சுங்கச்சாவடி அமைக்கக் கூடாது என இந்திய குடியரசு கட்சி வேலூர் மாவட்ட தலைவர் தலித் குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:வேலூர் மாவட்டம், காட்பாடியில் இருந்து பேர்ணாம்பட்டு வரையிலான இருவழிச் சாலையை (வி.கோட்டா சாலை) 4 வழிச்சாலையாக, தேசிய நெடுஞ்சாலையாக மாற்றும் பணி நடந்து கொண்டிருக்கிறது. இந்த
சுங்கச்சாவடி அமைக்கக்கூடாது: இந்திய குடியரசு கட்சி

வேலுார்: காட்பாடி முதல் குடியாத்தம் வரை புதியதாக சுங்கச்சாவடி அமைக்கக் கூடாது என இந்திய குடியரசு கட்சி வேலூர் மாவட்ட தலைவர் தலித் குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
வேலூர் மாவட்டம், காட்பாடியில் இருந்து பேர்ணாம்பட்டு வரையிலான இருவழிச் சாலையை (வி.கோட்டா சாலை) 4 வழிச்சாலையாக, தேசிய நெடுஞ்சாலையாக மாற்றும் பணி நடந்து கொண்டிருக்கிறது. இந்த சாலைக்காக, பில்லாந்திப்பட்டு ஊராட்சியில் சுங்கச்சாவடி (டோல்கேட் கட்டண வசூல் மையம்) அமைக்கும் பணியும் நடக்கிறது.
காட்பாடி சாலையில், 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. பல ஆயிரம் விவசாயிகள் விளைபொருள்கள் நாள்தோறும் வாகனங்களில் எடுத்துச் செல்கின்றனர். வடுகன்தாங்கல், கே.வி.குப்பம், லத்தேரியில் 3 வாரச்சந்தைகளும், காட்பாடி, குடியாத்தம் என 2 உழவர் சந்தைகளும் இருக்கின்றன. நாள்தோறும் மேற்கண்ட சந்தைகளுக்கு காய்கறிகள், பூக்கள், பழங்கள் என நூற்றுக்கணக்கான வேன்கள், லாரிகளில் மாறி, மாறி ஒரே நாளில் பயணிக்கின்றனர்.
இதனால் விவசாயிகள் வருவாயைவிட சுங்கக்கட்டணம் அதிகம் செலுத்தும் நிலை. இதேபோல தான் குடியாத்தம், பேர்ணாம்பட்டு, கே.வி.குப்பம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்காக ஒருபகுதியை மற்றொருவர் சார்ந்துள்ளனர். ஆகவே, காட்பாடியில் இருந்து குடியாத்தம் வழியிலான பேர்ணாம்பட்டு வரை எந்தவொரு இடத்திலும் சுங்கச்சாவடி அமைக்க கூடாது. மீறி அமைக்க முயன்றால், பில்லாந்திப்பட்டில் சுங்கச்சாவடி அமையும் இடத்தை முற்றுகையிடும் போராட்டத்தை இந்திய குடியரசு கட்சி நடத்தும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X