பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தொற்று: 1,542 பேர் பாதிப்பு

Added : ஆக 28, 2021
Share
Advertisement
கொரோனா தொற்றால், தமிழகத்தில் புதிதாக, 1,542 பேர் நேற்று பாதிக்கப்பட்டனர். மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தமிழகத்தில் உள்ள, 288 கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில் நேற்று மட்டும், 1.62 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அதில், கோவையில், 231; சென்னையில், 162; செங்கல்பட்டில், 126; ஈரோட்டில், 122 என, 1,542 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை, 96 ஆயிரத்து, 514 சிறார்களும், 3 லட்சத்து, 75

கொரோனா தொற்றால், தமிழகத்தில் புதிதாக, 1,542 பேர் நேற்று பாதிக்கப்பட்டனர்.

மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தமிழகத்தில் உள்ள, 288 கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில் நேற்று மட்டும், 1.62 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அதில், கோவையில், 231; சென்னையில், 162; செங்கல்பட்டில், 126; ஈரோட்டில், 122 என, 1,542 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை, 96 ஆயிரத்து, 514 சிறார்களும், 3 லட்சத்து, 75 ஆயிரத்து, 993 முதியோரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கடந்தாண்டு மார்ச் முதல், தற்போது வரை, 4.16 கோடி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில், 26 லட்சத்து, 8,748 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், சிகிச்சை முடிந்து நேற்று, 1,793 பேர் உட்பட, 25 லட்சத்து, 56 ஆயிரத்து, 116 பேர் வீடு திரும்பி உள்ளனர். தற்போது, கோவையில், 2,107; சென்னையில், 1,922; ஈரோட்டில், 1,521; செங்கல்பட்டில், 1,141 என, 17 ஆயிரத்து, 797 பேர் சிகிச்சை பெறுகின்றனர். தொற்றால் நேற்று, 21 பேர் உட்பட, 34 ஆயிரத்து, 835 பேர் இறந்துள்ளனர். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X