பொது செய்தி

தமிழ்நாடு

26 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்: டி.ஐ.ஜி., அதிரடி!

Added : ஆக 28, 2021
Share
Advertisement
வேலுார்: வேலுார் சரகத்தில் உள்ள வேலுார், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்துார் ஆகிய மாவட்டங்களில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் பணியாற்றி வரும் 26 இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து வேலுார் சரக டி.ஐ.ஜி., பாபு இன்று அதிரடியாக உத்தரவிட்டார்.அதன்படி, கடலாடியில் பணியாற்றி வந்த இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி ஜோலார்பேட்டைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதே போல,

வேலுார்: வேலுார் சரகத்தில் உள்ள வேலுார், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்துார் ஆகிய மாவட்டங்களில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் பணியாற்றி வரும் 26 இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து வேலுார் சரக டி.ஐ.ஜி., பாபு இன்று அதிரடியாக உத்தரவிட்டார்.
அதன்படி, கடலாடியில் பணியாற்றி வந்த இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி ஜோலார்பேட்டைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதே போல, ஜோலார்பேட்டை லட்சுமி குடியாத்தம் டவுனுக்கும், ராணிப்பேட்டை மாவட்ட மது விலக்கு யுவராணி உம்மராபாத், அங்கு பணியாற்றிய நிர்மலா குடியாத்தம் மகளிர், அங்கு பணியாற்றிய நிர்மலா தேவி பெரணமல்லுார், தேசூரில் பணியாற்றி வந்த பாலசுப்பிகரமணியன் ஆம்பூருக்கும், அரக்கோணம் டவுன் முரளி கடலாடி, வேட்டவலம் நிலவழகன் வேலுார் தாலுகாவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு நந்தகுமார் வேலுார் தெற்கு, ராணிப்பேட்டை மாவட்ட சைபர் கிரைம் சாலமோன் ராஜா கண்ணமங்கலத்திற்கும், காவேரிப்பாக்கம் மகாலட்சுமி ராணிப்பேட்டை மாவட்ட மது விலக்கு அமல் பிரிவுக்கும், லத்தேரி கவிதா போளூர் மகளிர், வேலுார் மாவட்ட குற்றப் பிரிவு ஆவண காப்பகம் திருநாவுக்கரசு சோளிங்கருக்கும், அங்கு பணியாற்றி வந்த ஜெயபிரகாஷ் போளூருக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
வேலுார் தாலுகா அல்லி ராணி ஆரணி மகளிர், அங்கு பணியாற்றி வரும் சாஜின் வேலுார் மகளிருக்கும், வேலுார் தெற்கு கலையரசி செய்யாறு மது விலக்கு அமலாக்கப் பிரிவுக்கும், போளூர் கந்தசாமி பாணாவரத்திற்கும், வேலுார் மாவட்ட சிறப்பு குற்றத்தடுப்பு பிரிவில் பணியாற்றி வரும் கவிதா திருவண்ணாமலை மாவட்ட குற்றப் பிரிவுக்கும் மாற்றப்பட்டனர்.
அரக்கோணம் மகளிர் புனிதா போளூர் மது விலக்கு பிரிவுக்கும், அங்கு பணியாற்றி வந்த பிரகாஷ் கந்திலிக்கும், அரக்கோணம் தாலுகா கோகுல் ராஜன் ஆரணி டவுனுக்கும், கந்திலி மணிமாறன் காவேரிப்பாக்கத்திற்கும், பாணாவரம் லட்சமிபதி கீழ்பென்னாத்துாருக்கும், திருவண்ணாமலை டவுன் குற்றப்பிரிவு நாகராஜன் வேலுார் மாவட்ட குற்ற ஆவண காப்பகத்திற்கும், கீழ்பென்னாத்துாரில் பணியாற்றி வந்த சியாமளா வேலுார் தெற்று குற்றப்பிரிவுக்கும் இட மாற்றம் செய்யப்பட்டனர். இவர்கள் 24 மணி நேரத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் பொறுப்பேற்க வேண்டும் என டி.ஐ.ஜி., உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X