மைசூரு மாணவி பலாத்காரம்: அவிநாசி அருகே 4 பேர் கைது

Updated : ஆக 28, 2021 | Added : ஆக 28, 2021 | கருத்துகள் (60+ 28)
Share
Advertisement
அவிநாசி: கர்நாடக மாநிலம், மைசூரில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் திருப்பூர் மாவட்டம், அவிநாசி அடுத்த சேயூரைச் சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.மைசூரு நகரில் எம்.பி.ஏ., படித்துக் கொண்டிருந்த, 23 வயது மாணவி ஒருவர், தன் ஆண் நண்பருடன், கடந்த 24ம் தேதி இரவில் சாமுண்டி மலை அடிவாரத்தில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஆறு பேர் அடங்கிய கும்பலால் பாலியல்
மைசூரு, மாணவி, கல்லூரிமாணவி, பலாத்காரம், குற்றவாளிகள், கைது, திருப்பூர், அவிநாசி,

அவிநாசி: கர்நாடக மாநிலம், மைசூரில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் திருப்பூர் மாவட்டம், அவிநாசி அடுத்த சேயூரைச் சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

மைசூரு நகரில் எம்.பி.ஏ., படித்துக் கொண்டிருந்த, 23 வயது மாணவி ஒருவர், தன் ஆண் நண்பருடன், கடந்த 24ம் தேதி இரவில் சாமுண்டி மலை அடிவாரத்தில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஆறு பேர் அடங்கிய கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். தடுக்க முயன்ற ஆண் நண்பரும் தாக்கப்பட்டார். இருவரும் மைசூரு மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். மாநிலம் முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த கொடூர குற்றத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து, பகிரங்கமாக துாக்கிலிடும்படி மாநிலத்தின் பல பகுதிகளில் மாணவியர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


latest tamil news


பாலியல் பலாத்காரம் நடைபெற்ற இடத்தில், செல்போன் டவர் மூலம் கர்நாடக போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ஐந்து பேர் கொண்ட கும்பல் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட தமிழகத்தில் உள்ள ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப்பகுதி, சூசைபுரம் கிராமத்தில் வசிக்கும் பழனிச்சாமி என்பவரது மகன் பூபதி (28) என்பவரை, மைசூரிலிருந்து வந்த போலீசார் கைது செய்துள்ளனர்.


latest tamil news


இந்நிலையில், மீதமுள்ள நான்கு பேரையும், கர்நாடகா போலீசார் இன்று திருப்பூர் மாவட்டம், அவிநாசி அடுத்து சேயூர் பகுதியைச் சார்ந்த நான்கு பேரை கைது செய்துள்ளனர். இதில் சேவூர் லூர்துபுரம் கருவேங்காடு பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரை நேற்று போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (60+ 28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NARAYANAN.V - coimbatore,இந்தியா
01-செப்-202122:14:11 IST Report Abuse
NARAYANAN.V நிர்பயா கேஸ்ல குற்றவாளிகள் 'எங்களையெல்லாம் அப்படி சாதாரணமாகத் தூக்கில போட்ற முடியாது' என்று தெனாவெட்டாக இருந்ததையும் அனைவரும் பார்த்தோம்.அந்த ரீதியில் இந்தக் குற்றவாளிகள் இருந்தாலும் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
01-செப்-202120:51:24 IST Report Abuse
Rajagopal சீமான் இதைப்பற்றி என்ன சொல்லப்போகிறார்? தமிழர்களை கர்நாடக போலீசார் எப்படி கைது செய்யலாம் என்று முழங்குவாரா?
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli,வலிமையான இந்திய கண்டம் ,இந்தியா
31-ஆக-202104:53:18 IST Report Abuse
NicoleThomson ஒருத்தனை அரெஸ்ட் செய்ய போனபோது சிறுத்தையா சீரிய பெற்றோர் குறித்து கருநாடக டிவியில் போட்டு காட்டினார் அப்படியிருக்க இன்னமும் போன் கால் சே பத்தி குறிப்பிடும் ஆளும்கட்சியினர் கொஞ்சம் அடக்கி வாசிப்பது நலம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X