பொது செய்தி

தமிழ்நாடு

'விவசாயிகளுடன் ஒரு நாள்': எம்.எல்.ஏ.,க்களுக்கு புதிய திட்டம்

Updated : ஆக 28, 2021 | Added : ஆக 28, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை: ‛‛விவசாயிகளுடன் ஒரு நாள் என்ற புதிய திட்டத்தின்படி அனைத்து எம்.எல்.ஏ.,க்களும் விவசாயிகளிடம் குறைகளை நேரில் கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு பிறப்பித்து உள்ளார் ,'' என்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் ஒவ்வொரு துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம்
AGRI, COLLEGE, NEW, TAMILNADU, ASEMBLY, வேளாண் கல்லுாரிகள், அரசு அறிவிப்பு

சென்னை: ‛‛விவசாயிகளுடன் ஒரு நாள் என்ற புதிய திட்டத்தின்படி அனைத்து எம்.எல்.ஏ.,க்களும் விவசாயிகளிடம் குறைகளை நேரில் கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு பிறப்பித்து உள்ளார் ,'' என்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் ஒவ்வொரு துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று (ஆக.28) வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில், வேளாண் துறை சார்பில் வெளியான அறிவிப்பு:
'விவசாயிகளுடன் ஒரு நாள்' என்ற புதிய திட்டம் அறிவிக்கப்படுகிறது. ஒவ்வொரு எம்.எல்.ஏ.,வும் தங்கள் தொகுதியில் உள்ள கிராமத்திற்கு சென்று, விவசாயிகள் குறைகளை கேட்டு தீர்வு காண வேண்டும். மாதம் ஒரு நாள் விவசாயிகளை சந்திப்பதுடன், அவர்களின் கருத்துகளை கேட்க வேண்டும்.


வேளாண் கல்லூரி



latest tamil news


தற்போது, வேளாண் கல்வி மற்றும் வேளாண் ஆராய்ச்சியின் தேவை அதிகரித்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, வேளாண் நிதிநிலை அறிக்கையில் கிருஷ்ணகிரியில் புதியதாக அரசுத் தோட்டக்கலைக் கல்லூரி தொடங்க அறிவிக்கப்பட்டது.

வேளாண் கல்வியின் முக்கியத்துவம் கருதி, 2021-2022ம் ஆண்டில், கரூர் மாவட்டம், நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ்வேளூா், சிவகங்கை மாவட்டத்தில் செட்டிநாடு ஆகிய இடங்களில் மூன்று புதிய அரசு வேளாண்மைக் கல்லூரிகள் தொடங்குவதற்கு மாநில அரசு தலா ரூ.10 கோடி வீதம் மொத்தம் ரூ.30 கோடி நிதியை ஒதுக்கும். இவ்வாறு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அறிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
29-ஆக-202116:26:54 IST Report Abuse
Mani . V மாதத்தில் ஒரு நாள் ஒரு விவசாயியுடன் இருந்தால் அவர்கள் கஷ்டம் தெரிந்து விடுமா? அத்துடன் இந்த ரௌடிகள் ஸாரி எம்.எல்.ஏக்கள் "எனக்கு காடை கொண்டா, கௌதாரி கொண்டா" என்று விவசாயியை டார்ச்சர் செய்து கொலையாய் கொல்லப் போகிறார்கள்.
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli,வலிமையான இந்திய கண்டம் ,இந்தியா
29-ஆக-202105:09:07 IST Report Abuse
NicoleThomson பாவம் விவசாயிகள் , இந்த அரசியல்வாதிகளின் அடிப்பொடிகள் பண்ணும் அளப்பறையை எவ்வளவு பயிர்கள் தாங்க போகிறதோ?
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
28-ஆக-202121:21:21 IST Report Abuse
Ramesh Sargam மற்ற நாட்களில் அவர்கள் என்ன செய்யவேண்டும் என்று கூறினால் சிறப்பாக இருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X