குறி வைத்தவர்கள் பலி: டுரோன் தாக்குதல் குறித்து அமெரிக்கா கருத்து

Updated : ஆக 28, 2021 | Added : ஆக 28, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
காபூல்: காபூல் விமான நிலையத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்தியவர்களை இலக்காக வைத்து நடத்திய தாக்குதலில், குறிவைத்தவர்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்து உள்ளது.ஆப்கன் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே ஐ.எஸ்.ஐ.எஸ்.-கே பயங்கரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில் அமெரிக்க ராணுவ வீரர்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை நடத்தியவர்கள் யாராக
அமெரிக்கா, ராணுவம், காபூல், ஐஎஸ்ஐஎஸ், தாக்குதல்

காபூல்: காபூல் விமான நிலையத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்தியவர்களை இலக்காக வைத்து நடத்திய தாக்குதலில், குறிவைத்தவர்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்து உள்ளது.

ஆப்கன் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே ஐ.எஸ்.ஐ.எஸ்.-கே பயங்கரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில் அமெரிக்க ராணுவ வீரர்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் , அவர்களை மன்னிக்கவும் மாட்டோம். மறக்கவும் மாட்டோம். தகுந்த பதிலடி கொடுப்போம் என அமெரிக்க அதிபர் பைடன் கூறியிருந்தார். இதன்படி ஐ.எஸ்.ஐ.எஸ்.-கே படைகள் மீது அமெரிக்க ராணுவம் டுரோன் மூலம் தாக்குதல் நடத்தியது.


latest tamil news



இது குறித்து அமெரிக்க ராணுவ அதிகாரி பில் அர்பன் கூறுகையில், ஆப்கனின் நன்கர்ஹர் மாகாணத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. குறிவைத்த இலக்கில் இருந்தவர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் நிச்சயமாக அப்பாவி மக்கள் பாதிக்கப்படவில்லை எனக்கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli,வலிமையான இந்திய கண்டம் ,இந்தியா
29-ஆக-202105:08:17 IST Report Abuse
NicoleThomson அப்போ இறந்த அந்த அப்பாவி 14 அமெரிக்கர்களை மீண்டும் கொடுக்குமா இந்த தாக்குதல்? இல்லை அவர்களுக்கு பதிலாக நீ செத்து அவர்களின் குடும்பத்திற்கு பதில் சொல்வாயா?
Rate this:
Cancel
mathimandhiri - chennai,இந்தியா
28-ஆக-202119:07:42 IST Report Abuse
mathimandhiri இந்தக் கிழவர் தப்பு தப்பாக, முன்னுக்கு முரணாக காரியங்கள் செய்து கொண்டிருக்கிறார்//// பேச்சில் நம்பிக்கையோ ,நேர்மையோ தென்பட வில்லை///// அவனுகளைப் பணிய வைத்து சேதாரம் இல்லாமல் , சரியான தருணத்தில், நன்றாக திட்டமிட்டு படைகளை வாபஸ் பெறுவதை விட்டு விட்டு கடல் போல் ஆயுதங்களை , அழிவு சக்திகளுக்கு அளித்து விட்டு உலகுக்கே பெருத்த ஆபத்தை உருவாக்கி விட்டு கையைப் பிசைந்து கொண்டு நிற்கிறார் ///சீனாவை எதிர்த்து கல்வானில் நமது இந்திய படை எப்படி நிலை நிறுத்தப் பட்டது, எந்த மாதிரியான முறையில் வாபஸ் பெறப் படுகிறது என்பது உலங்குக்கே ஒரு உதாரணம்.
Rate this:
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
28-ஆக-202118:33:26 IST Report Abuse
Sanny காரில் போகும்போது துல்லியமாக தாக்குதல், அங்கேயும் காட்டிக்கொடுக்க இருக்கிறாங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X