பொது செய்தி

தமிழ்நாடு

நீதிபதி எம்.எம்.சுந்தரேஷுக்கு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து

Added : ஆக 28, 2021
Share
Advertisement
சென்னை: 'உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்கவுள்ள எம்.எம்.சுந்தரேஷ் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்புகளை வழங்க வாழ்த்துக்கள்' என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான எம்.எம்.சுந்தரேஷ் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு உள்ளார். உச்சநீதிமன்றத்தில் மொத்தமுள்ள 33 நீதிபதிகள் பணியிடங்களில் 10 இடங்கள்

சென்னை: 'உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்கவுள்ள எம்.எம்.சுந்தரேஷ் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்புகளை வழங்க வாழ்த்துக்கள்' என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான எம்.எம்.சுந்தரேஷ் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு உள்ளார். உச்சநீதிமன்றத்தில் மொத்தமுள்ள 33 நீதிபதிகள் பணியிடங்களில் 10 இடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்பும் நோக்கத்துடன் ஒன்பது நீதிபதிகளை மூத்த நீதிபதிகள் குழு பரிந்துரையுடன் மத்திய அரசு நியமித்திருக்கிறது.

ஏற்கனவே தமிழகத்தை சேர்ந்த நீதிபதி ராமசுப்பிரமணியன் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருக்கும் நிலையில் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷும் பதவி உயர்வின் வாயிலாக செல்வதால் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் இரண்டாக உயர்ந்துள்ளது. இளம் வயதில் பொறுப்பேற்கவிருக்கும் எம்.எம்.சுந்தரேஷ் ஆறு ஆண்டுகளுக்கு அப்பொறுப்பில் நீடிப்பார். உச்சநீதிமன்றத்தின் மூன்றாவது நீதிபதியாக அவர் உயரக்கூடும். வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகளை அவர் வழங்குவார். அவரது பணி சிறக்க வாழ்த்துக்கள். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X