குண்டர் சட்டத்தில் சாராய வியாபாரி கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குண்டர் சட்டத்தில் சாராய வியாபாரி கைது

Added : ஆக 28, 2021
Share
பேர்ணாம்பட்டு: பேர்ணாம்பட்டு சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.வேலுார் மாவட்டம், பேர்ணாம்பட்டு அடுத்த சாத்கர் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார், 28. கள்ளச்சாராய வியாபாரியான அவரை குடியாத்தம் மதுவிலக்கு போலீசார் கடந்த மாதம் கைது செய்து வேலுார் மத்திய ஆண்கள் சிறையில் அடைத்தனர்.அவர் மீது 40க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதால் குண்டர் சட்டத்தில் கைது

பேர்ணாம்பட்டு: பேர்ணாம்பட்டு சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
வேலுார் மாவட்டம், பேர்ணாம்பட்டு அடுத்த சாத்கர் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார், 28. கள்ளச்சாராய வியாபாரியான அவரை குடியாத்தம் மதுவிலக்கு போலீசார் கடந்த மாதம் கைது செய்து வேலுார் மத்திய ஆண்கள் சிறையில் அடைத்தனர்.
அவர் மீது 40க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதால் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியனுக்கு எஸ்.பி., செல்வகுமார் பரிந்துரை செய்தார்.
இதையடுத்து குண்டர் சட்டத்தில் அவரை கைது செய்ய மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டார். போலீசார் அதற்கான நகலை சிறையில் உள்ள அருண்குமாரிடம் இன்று வழங்கினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X