கான்கிரீட் கலவை உறுதியை அதிகரிக்கும் எரிசாம்பல்

Added : ஆக 28, 2021
Share
Advertisement
கட்டுமான பணிகள் என்றாலே பல நிலைகளுக்கும் சிமென்ட் பயன்பாடு அவசியம். அடித்தளம், பீம் அமைப்பது தொடர்பான பணிகளுக்கு அதிக சிமென்ட் தேவைப்படும். செங்கல் கட்டுமானத்துக்குக் குறைந்த அளவு தேவைப்படும். அதேபோல் மேல் பூச்சுக்கும் கொஞ்சம் அதிக அளவில் தேவை. இதில் முக்கியமானது அடித்தளம், பீம் அமைக்கும் பணிகள் தான். இது போன்ற பணிகளுக்கு சிமென்ட், மணல், ஜல்லி சரியான விகிதத்தில்

கட்டுமான பணிகள் என்றாலே பல நிலைகளுக்கும் சிமென்ட் பயன்பாடு அவசியம். அடித்தளம், பீம் அமைப்பது தொடர்பான பணிகளுக்கு அதிக சிமென்ட் தேவைப்படும். செங்கல் கட்டுமானத்துக்குக் குறைந்த அளவு தேவைப்படும். அதேபோல் மேல் பூச்சுக்கும் கொஞ்சம் அதிக அளவில் தேவை.

இதில் முக்கியமானது அடித்தளம், பீம் அமைக்கும் பணிகள் தான். இது போன்ற பணிகளுக்கு சிமென்ட், மணல், ஜல்லி சரியான விகிதத்தில் கலக்க வேண்டியது அவசியம். இல்லை என்றால் கட்டடத்தின் ஆயுள் பாதிக்க அதிக வாய்ப்புள்ளது.சிமென்ட், மணல், ஜல்லி 1:2:4 என்ற விகிதத்தில் கலக்க வேண்டும். இதில் சிமென்ட்டின் பாதி அளவு தண்ணீர் சேர்க்க வேண்டும். உதாரணமாக 50 கிலோ சிமென்ட்டுக்கு 100 கிலோ மணல், 200 கிலோ ஜல்லி சேர்க்க வேண்டும். இந்தக் கலவையுடன் 25 கிலோ தண்ணீரை சேர்க்க வேண்டும்.இந்த சேர்க்கை அதிகமானாலும் குறைந்தாலும் கலவை தரம் பாதிக்கும்.

தண்ணீர் அதிகமானால் கான்கிரீட் கலவையின் தரம் குறையும். சிமென்டில் உள்ள நுண்ணிய துகள்கள் சுருங்கி அங்கே காற்று உட்புகுந்து கான்கிரீட் தரம் பாதிக்கும். தண்ணீர் அளவு குறைந்தால் கலவை பிணைப்பின்றி போகும். இதனால் கலவை உறுதிஇழக்கும்.கான்கிரீட் கலவையை தயாரிக்க உப்பு தண்ணீர் பயன்படுத்தினால் கூட கான்கிரீட் கலவையின் தரம் பாதிக்கும். சில இடங்களில் விழிப்புணர்வின்றி உப்பு தண்ணீர் பயன்படுத்துவர். இதை தவிர்க்க வேண்டும். கான்கிரீட் கலவை உறுதி அதிகரிக்க எரிசாம்பல், எரி உலைக் கசடுகள் போன்றவற்றை கூட சேர்க்கலாம் என்கிறார்கள் கட்டுமான வல்லுனர்கள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X