நிலைவாசல் கதவு அமைப்பதில் கவனிக்க வேண்டியவை

Added : ஆக 28, 2021
Share
Advertisement
ஒரு வீட்டின் நிலை வாசல் கதவு இப்படி தான் இருக்க வேண்டும் என்று நம் முன்னோர்களால் சாஸ்திரப்படி கூறப்பட்டுள்ளது.கதவில் 'கீச்' சத்தம் நம் வீட்டை பாதுகாக்கும் அதிர்ஷ்ட தேவதைகளும், வாஸ்து தேவதைகளும், மகாலட்சுமியும் நம் வீட்டு நிலை வாசல் கதவில் தான் குடியிருப்பதாக ஐதீகம். நம் வீட்டையும், நம்மையும் பாதுகாக்கும் வீட்டின் முன்வாசல் கதவை எப்படி வைத்திருக்க வேண்டும்.

ஒரு வீட்டின் நிலை வாசல் கதவு இப்படி தான் இருக்க வேண்டும் என்று நம் முன்னோர்களால் சாஸ்திரப்படி கூறப்பட்டுள்ளது.

கதவில் 'கீச்' சத்தம்

நம் வீட்டை பாதுகாக்கும் அதிர்ஷ்ட தேவதைகளும், வாஸ்து தேவதைகளும், மகாலட்சுமியும் நம் வீட்டு நிலை வாசல் கதவில் தான் குடியிருப்பதாக ஐதீகம். நம் வீட்டையும், நம்மையும் பாதுகாக்கும் வீட்டின் முன்வாசல் கதவை எப்படி வைத்திருக்க வேண்டும். எப்படி வைத்திருக்க கூடாது என்பதை பற்றி தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். வீட்டை பாதுகாக்கும் தேவதைகள் முன் வாசல் கதவில் குடியிருப்பதால் தேவையற்ற சத்தங்கள் அந்த கதவிலிருந்து வரக்கூடாது. மூடும் போதும், திறக்கும் போதும் சில வீடுகளில் 'கீச் சத்தம் ஒலிக்கும். அந்த சத்தம் கேட்காமல் எண்ணெய் விட்டு மென்மையாக மூடி, திறக்கும்படி வைப்பது நல்லது.

இரட்டை கதவு சிறப்பு

நம் வாசல் கதவிற்கு நேர் எதிராக மரம் அல்லது மின் கம்பம் இருக்கக்கூடாது. இது நம் வீட்டிற்குள் மகாலட்சுமி நுழைவதை தடுக்கும் என சாஸ்திரம் கூறுகிறது. வீட்டின் முன் வாசல் கதவில் விரிசல் இருந்தாலும், உடைந்து இருந்தாலும் அதில் இருக்கும் கலர்கள் பெயர்ந்து இருந்தாலும் அதை உடனே புதுப்பிக்க வேண்டும். முன்பெல்லாம் வாசல் கதவு இரண்டாக இருக்கும். நாகரிகம் என்ற பெயரில் இந்த காலத்தில் ஒற்றை கதவு வைக்கிறார்கள். சாஸ்திரப்படி இரட்டை கதவு வைப்பது தான் சிறப்பு. ஒற்றை கதவாக இருந்தாலும், இரட்டைக் கதவாக இருந்தாலும் வேலைப்பாடு குறைவாக இருப்பது நல்லது.

கதவு உள் பக்கம் திறப்பு

முடிந்த வரை சுவாமி படம் இருந்தால் போதும். அதிக வேலைப்பாடுடைய கதவுகளும் சரியானது அல்ல. இதே போல் நம் வீட்டில் இருக்கும் பிற அறைகளின் கதவை விட, நம் வீட்டின் முன்வாசற்படி கதவு நீள, அகலத்திலும் பெரியதாக இருக்க வேண்டும். ராஜவாசல் என்பது பிற கதவுகளை விட பெரிதாக இருப்பது பலன் தரும். வீட்டிலிருக்கும் எந்த கதவாக இருந்தாலும் உள்பக்கம் திறக்க வேண்டும். ஜன்னல்களை வேண்டுமென்றால் வெளிப்பக்கம் திறக்கலாமே தவிர, கதவு வெளிப்பக்கம் திறக்கும் படி அமைத்து கொள்ள வேண்டாம்.

வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் நில வாசற்படிக்கு மஞ்சள் குங்குமம், இரண்டு பக்கமும் பூக்கள், ஊதுவத்தி வைத்து வணங்குவது நல்லது. எனவே, வீட்டு நிலை வாசல் கதவு வைப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார்கள் வாஸ்து நிபுணர்கள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X