செலவில்லாமல் சுவர்களை அலங்கரிக்க

Added : ஆக 28, 2021
Share
Advertisement
இப்போதெல்லாம் வீடு கட்டுவதோடு அதை அலங்கரிக்கவும் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதற்காக சிலர் பல லட்சம் வரை செலவு செய்வதும் உண்டு. ஆனால், அதிக செலவு இல்லாமல் நம் வீட்டு சுவர்களை கலைநயத்துடன் விரும்பிய வகையில் அலங்கரிக்க பல்வேறு வழிகள் உள்ளன.குச்சிகளில் சுவர் அலங்காரம்பழமை விரும்பிகள் பலர் நவீன வீடாக இருந்தாலும் கிராமத்து வீடு போல் காட்சியளிக்க வேண்டும் என

இப்போதெல்லாம் வீடு கட்டுவதோடு அதை அலங்கரிக்கவும் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதற்காக சிலர் பல லட்சம் வரை செலவு செய்வதும் உண்டு. ஆனால், அதிக செலவு இல்லாமல் நம் வீட்டு சுவர்களை கலைநயத்துடன் விரும்பிய வகையில் அலங்கரிக்க பல்வேறு வழிகள் உள்ளன.

குச்சிகளில் சுவர் அலங்காரம்

பழமை விரும்பிகள் பலர் நவீன வீடாக இருந்தாலும் கிராமத்து வீடு போல் காட்சியளிக்க வேண்டும் என ஆசைப்படுவர். பெரும்பாலும் பிரவுன் நிறங்கள் தான் அது போன்ற தோற்றம் தரும். இதற்காக பல அளவுகளில் மரக்குச்சிகளை சேகரிக்க வேண்டும். சிறியது முதல் பெரியது வரை ஒவ்வொரு குச்சியையும் ஒட்ட வேண்டும். பின் பெரியது முதல் சிறியது வரை வரிசையாக ஒட்ட வேண்டும். பிறகு இரண்டையும் இணைத்தால் அழகான வடிவம் கிடைக்கும். இதை சுவரில் ஒட்டினால் பழங்கால அலங்காரம் போல் காட்சியளிக்கும்.

ஆணிகளில் நுால் பின்னல்

ஆணிகளை தேவையான உருவங்களில் சுவரில் அடிக்க வேண்டும். எழுத்து வேண்டுமென்றால் அதன் வடிவத்தில் அடிக்க வேண்டும். முதலில் பென்சிலில் வரைந்து அடிக்கலாம். பின் ஆணிகளை கலர் நுாலால் கோர்த்தால் விரும்பிய வடிவம் கிடைக்கும். பிறகு இரண்டு ஆணிகளின் குறுக்கே நுால் கட்ட வேண்டும். ஆணிகளை வைத்து நுால் பின்னியது போன்ற அழகான தோற்றம் கிடைக்கும். இதை படிக்கும் அறையில் செய்தால் அழகாக இருக்கும். ஆணி அடிக்க பிரத்யேக சிறு எலக்டரிக்கல், மேனுவல் கருவிகள் கிடைக்கிறது. அதை முறையாக பயன்படுத்தலாம்.

கலர் பேப்பர் பிரேம்கள்

வீட்டில் தேவையில்லாத கலர், கிப்ட் பேப்பர்கள் இருந்தால் டாட்ஸ் அலங்காரம் செய்து விடலாம். அந்தபேப்பர்களை வட்டமாக வெட்டி கொள்ள வேண்டும். இதை எளிதில் செய்ய பஞ்சிங் இயந்திரம் தேவை. ஒரே அளவிலும், வெவ்வேறு அளவிலும் வட்டங்கள் வரைந்து அதை வெட்டி வைத்து கொள்ளுங்கள். பின் கேன்வாஸ் ஒன்றில் வரிசையாக கலர் பேப்பர் ஒட்டி பிரேம் செய்து மாட்டினால் போதும். சந்தையில் இதற்காகவே டிசைனர் பிரேம்கள் கிடைக்கிறது.

சமயைலறை சுவரில் ஸ்பூன்கள்

குறைந்த விலையில் கிடைக்கும் ஸ்பூன், கரண்டிகள் அல்லது வீட்டில் பயன்படாமல் இருக்கும் ஸ்பூன் உள்ளிட்ட சமையல் பாத்திரங்களை சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின் அதை சமையலறை சுவரில் ஆங்காங்கே பொருத்தி விட்டால் பார்க்க அழகாக இருக்கும். சிலர் ஸ்பூன்களை சுற்றி வட்டமாக வைத்து நடுவில் கடிகாரம் வடிவமைத்திருப்பதை பார்த்திருப்போம். கற்பனைக்கு ஏற்ப இது போன்ற பொருட்களை பயன்படுத்தலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X