சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : ஆக 28, 2021
Share
Advertisement
அறிவியல் ஆயிரம்அணு ஆயுத எதிர்ப்புஅணு மிக சிறியது. கண்களால் பார்க்க முடியாது. ஆனால் இதன் சக்தி மிகப் பெரியது. அணு மூலம் மின்சாரம் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கிறது. ஆனால் இதை தவறான வழியில் பயன்படுத்தினால் மக்களின் வாழ்க்கை, சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இதற்கு சான்று ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள். அணு ஆயுத சோதனையை தடுக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஆக. 29ல் உலக

அறிவியல் ஆயிரம்

அணு ஆயுத எதிர்ப்பு


அணு மிக சிறியது. கண்களால் பார்க்க முடியாது. ஆனால் இதன் சக்தி மிகப் பெரியது. அணு மூலம் மின்சாரம் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கிறது. ஆனால் இதை தவறான வழியில் பயன்படுத்தினால் மக்களின் வாழ்க்கை, சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இதற்கு சான்று ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள். அணு ஆயுத சோதனையை தடுக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஆக. 29ல் உலக அணு ஆயுத சோதனை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, இந்தியா, பாக்., வடகொரியா, இஸ்ரேல் 'அணு ஆயுத நாடு' என கருதப்படுகின்றன.

தகவல் சுரங்கம்

தேசிய விளையாட்டு தினம்


உடல், மனதுக்கு புத்துணர்ச்சி தருவது விளையாட்டு. இந்தியாவின் சிறந்த ஹாக்கி வீரராக திகழ்ந்த 'தயான் சந்த்'தை கவுரவிக்கும் விதமாக அவரது பிறந்த தினம் (ஆக.29), தேசிய விளையாட்டு தினமாக கொண்டா டப்படுகிறது. விளையாட்டு மீதான ஆர்வத்தை இளைஞர்களிடம் உருவாக்குவதே இதன் நோக்கம். தயான் சந்த் 1905 ஆக. 29ல் உ.பி.,யின் அலகாபாத்தில் பிறந்தார். 14வது வயதில் ஹாக்கி விளையாட துவங்கினார். ராணுவத்தில் இருந்து ஹாக்கி அணியில் இடம்பெற்றார். சர்வதேச அளவில் ஹாக்கி போட்டிகளில் 570 கோல்கள் அடித்து சாதனை படைத்தவர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X