அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழக அரசு மக்கள் பிரச்சினையைத் தீர்க்கக் கூடிய அரசாக செயல்பட வேண்டும்: ஜிகே வாசன்

Updated : ஆக 28, 2021 | Added : ஆக 28, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
வேலூரில் இன்று தமாகா கட்சி சார்பில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் தமாகா தலைவர் ஜிகே வாசன் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண்மை மசோதாவிற்கு விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதை நூறு சதவிகிதம் தீர்த்துக் கொள்ளக் கூடும் நிலையிலே

வேலூரில் இன்று தமாகா கட்சி சார்பில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் தமாகா தலைவர் ஜிகே வாசன் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.latest tamil news
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண்மை மசோதாவிற்கு விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதை நூறு சதவிகிதம் தீர்த்துக் கொள்ளக் கூடும் நிலையிலே எதிர்க்கட்சிகள் செயல்பட வேண்டும் ,அதற்கு விவசாயிகளுக்கு குரல் கொடுக்கின்ற கட்சி மத்திய அரசோடு கலந்து பேசி முடிவுகளை எடுக்க வேண்டுமே தவிர பாராளுமன்றத்தில் கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தி பாராளுமன்றத்தை நடத்த விடாமல் முக்கிய மசோதாக்களுக்கு தடையாக இருந்தது போல இன்றைக்கு எதிர்க்கட்சிகள் விவசாயிகளுடைய வருங்கால நலனுக்கு தடையாக இருக்கிறார்கள்.

விவசாயிகளுக்கு உண்மையான சங்கடங்கள் இருந்தால் அதைத் தீர்க்க கூடிய நிலையை ஏற்படுத்த மத்திய அரசு தயாராக உள்ளது என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.எனவே அதை பேசி தீர்க்க கூடிய நிலையில் எதிர்க்கட்சிகள் இல்லை. விவசாயிகளுக்கு தடங்களாக இருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.எனவே வேளாண்மை மசோதாவில் விவசாயிகளுக்கு நன்மை கிடைக்க வேண்டுமானால் எதிர்க்கட்சிகள் மத்திய அரசோடு சுமூகமான பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் எனக் கூறினார்.


ஒத்த கருத்துமேகதாது அணை பிரச்சினையில் அணை கட்ட கூடாது என்பதில் தமிழக அரசியல் கட்சிகள் ஒத்தகருத்தில் உள்ளது .தமிழ் மாநில காங்கிரஸ் அதில் உறுதியாக இருக்கிறது. மேகதாதுவில் அணை கட்ட கூடிய நிலையில் அதை நினைத்துப் பார்க்கக் கூட நம்முடைய விவசாயிகளால் முடியாது.அணை கட்டும் பட்சத்தில் விவசாயிகளுக்கு மட்டுமல்ல. ஒட்டுமொத்த மக்களுக்கும் அது பாதிப்பை ஏற்படுத்தும்.எனவே கர்நாடக அரசு மேகதாது அணையை கட்ட எந்த முயற்சியிலும் ஈடுபடக்கூடாது. அதற்கு மத்திய அரசு நிச்சயமாக இசைவு தராது. கூட்டாட்சித் தத்துவத்திற்கு ஏற்றார்போல் கர்நாடக அரசு செயல்பட வேண்டும்.


அரசு தெளிவுபடுத்த வேண்டும்திமுக அரசு அதிக அளவில் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அளித்து வாக்குகளைப் பெற்றுள்ளனர்.எனவே தேர்தல் நேரத்தில் அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும்,ஆனால் தமிழக அரசு அதனை நிறைவேற்ற தயங்குகிறது. நிறைவேற்றுவதற்கான எந்தவித தெளிவையும் மக்களுக்கு அவர்கள் இதுவரை தெளிவு படுத்த வில்லை.

கல்விக் கடன் ,நகைக் கடன், விவசாய கடன், மாதம் ஒருமுறை மின்சார கணக்கிடும் முறை, இல்லத்தரசிகளுக்கு மாதம் 1000 உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்துவிட்டு அதனை திமுக அரசு செயல்படுத்தவில்லை.எனவே அதனை நிறைவேற்றக்கூடிய காலம் என்ன? எப்போது நிறைவேறும் அதற்குண்டான சூழல் இருக்கிறதா இல்லையா என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

பொதுதுறையின் மூலம் இந்திய நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த கூடிய திட்டத்தின் அடிப்படையிலேயே,பல லட்சம் கோடி ரூபாயை அதிலிருந்து வருமானமாக ஈட்டி நாட்டினுடைய வளர்ச்சியை உறுதி செய்து கொள்ளும் வகையில் மத்திய அரசு தன்னுடைய பணியை செய்யத் துவங்கி இருக்கிறது தவிர,பொதுத் துறையை தனியாருக்கோ வேறு எந்த நகருக்கும் மத்திய அரசு தாரை வார்த்துக் கொடுக்க வில்லை என்பதை அதனுடைய அமைச்சர் உறுதி செய்துள்ளார்.

மேலும் சென்ற ஆட்சியில் பல்வேறு நிலைகளிலே கடன்சுமை தொடர்ந்து மத்திய அரசுக்கு அதிகரித்த நிலை இருக்கிறது. மேலும் கொரானா காலத்திலேயே பல தொழில்கள் முடங்கி பாதிக்கப்பட்டு மக்கள் சிரமத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

மீண்டும் பொருளாதார நிலையை நாட்டில் சீரமைத்து படிப்படியாக பொருளாதாரத்தை உயர்த்தி, அனைத்து துறையில் உள்ள மக்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையிலேயே மத்திய அரசினுடைய இத்திட்டம் அமைந்து இருக்கின்றதே தவிர ,யாரும் மத்திய அரசுடைய சொத்தை அவருடைய பெயரிலேயே எடுத்துக்கொள்ள முடியாது. பொது மக்களின் சொத்து, எந்த ஆட்சியும் வரலாம் போகலாம். சொத்து மக்கள் சொத்து இந்தியாவினுடைய சொத்து.

மத்திய அரசு நாட்டின் பொருளாதாரம் உயர மக்களுடைய வாழ்க்கை தரம் உயர இன்றைக்கு ஒரு திட்டத்தை தீட்டி அதனை வெற்றிகரமாக செயல்படுத்த தொடங்கி இருக்கிறது இதுதான் உண்மை நிலை.தமிழக அரசு ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபட்டு மக்கள் பிரச்சினைகளை தீர்க்க கூடிய நிலையை ஏற்படுத்தவேண்டும்.


latest tamil news
ஏராளமான அள்ளிக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கூடிய உண்மை நிலைக்கு அவர்கள் வர வேண்டுமே தவிர, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு செயல்பட தொடங்குவது நிச்சயமாக மக்களுக்கு செய்யவேண்டிய பிரச்சினைகளிலிருந்து அவர்கள் திட்டங்களில் இருந்து அவர்கள் விலகுகின்றார்கள் என்பதுதான் உண்மைநிலை .
எதிர்க்க வேண்டும் என்று கண்மூடித்தனமாக உள்நோக்கத்துடன் செயல்பட்டால் மக்கள் பயன் அடைய மாட்டார்கள் எனவே அரசியல் காழ்புணர்ச்சி க்கு இடம் கொடுக்க வேண்டாம். ஆக்க பூர்வமான நிலைக்கு இடம் கொடுத்து மக்கள் பிரச்சினையைத் தீர்க்கக் கூடிய அரசாக இந்த அரசு செயல்பட வேண்டும் என்பதுதான் எங்களுடைய வேண்டுகோள் என ஜி கே வாசன் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J. G. Muthuraj - bangalore,இந்தியா
29-ஆக-202107:52:09 IST Report Abuse
J. G. Muthuraj 'டும்....டும்' என்ற அறிவுரை பேச்சு பொறுப்பற்ற அரசியல்வாதிகளிடமிருந்துதான் வரும்......
Rate this:
Cancel
29-ஆக-202105:41:31 IST Report Abuse
முருகன் நீங்கள் மிக திறமையானவர். பிஜேபியின் ஆசியுடன் அதிமுகவின் உதவியில் எம்பி. அம்மா இருந்து இருந்தால் நீங்கள் ஒரு கட்சி யின் தலைவர் மட்டுமே
Rate this:
Cancel
29-ஆக-202104:05:21 IST Report Abuse
அப்புசாமி நீங்க எம்.பி ஆனதும் உங்க பிரச்சனை தீந்ர்தது. நீங்க யாரோட பிரச்சனைகளை தீர்த்தீங்க ஐயா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X