சம உரிமை!பாலின பாகுபாடு இல்லாத நாடாகிறது இந்தியா:பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்க நடவடிக்கை

Updated : ஆக 30, 2021 | Added : ஆக 28, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
நம் நாட்டில் பெண்களுக்கு அனைத்து துறைகளிலும் சம உரிமை வழங்கும் வகையில் நீதித்துறையும், மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த நடவடிக்கைகள் வரும் காலத்தில், பாலின பாகுபாடு இல்லா நாடாக இந்தியாவை மாற்றும் என சமூக ஆர்வலர்கள் பெருமிதம் தெரிவிக்கின்றனர். பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கும் முயற்சிகளில் நீதித் துறை ஈடுபட்டு வருகிறது. தேசிய ராணுவ அகாடமி
சம உரிமை!பாலின பாகுபாடு இல்லாத நாடாகிறது இந்தியா:பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்க நடவடிக்கை

நம் நாட்டில் பெண்களுக்கு அனைத்து துறைகளிலும் சம உரிமை வழங்கும் வகையில் நீதித்துறையும், மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த நடவடிக்கைகள் வரும் காலத்தில், பாலின பாகுபாடு இல்லா நாடாக இந்தியாவை மாற்றும் என சமூக ஆர்வலர்கள் பெருமிதம் தெரிவிக்கின்றனர்.

பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கும் முயற்சிகளில் நீதித் துறை ஈடுபட்டு வருகிறது. தேசிய ராணுவ அகாடமி மற்றும் தேசிய கடற்படை அகாடமி தேர்வு, செப்., 5ம் தேதி நடக்க இருந்தது. எனினும் இந்த தேர்வுகளில் ஆண்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாகவும், பாலின பாகுபாடின்றி, பெண்களுக்கும் இந்த தேர்வை எழுத அனுமதி வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


இறுதியான உத்தரவு

கடந்த வாரம் இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'ராணுவ அகாடமி மற்றும் கடற்படை அகாடமிக்கான தேர்வுகளை எழுத பெண்களுக்கும் அனுமதி வழங்க வேண்டும்' என, இடைக் கால உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து இந்த தேர்வு நவ., 14க்கு ஒத்திவைக்கப் பட்டது.'தேசிய ராணுவ அகாடமியில் பெண்கள் பயிற்சி மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டது கொள்கை முடிவு' என, அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டது.

எனினும் பாலினத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த கொள்கை முடிவை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்தது.இந்த மனு செப்., 8ல் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது இந்த விவகாரத்தில் இறுதியான உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது. பெண் உரிமைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருப்பது, இது முதன்முறையல்ல. இதற்கு முன் ராணுவத்தில் உள்ள பெண் அதிகாரிகளுக்காக நிரந்தர ஆணையம் அமைக்கவும், ஆண் அதிகாரிகளுக்கு வழங்குவதைப் போல் பெண் அதிகாரிகளுக்கும் உயர் பதவிகளை வழங்கவும் உத்தரவுகளை பிறப்பித்துஇருந்தது.


'சைனிக்' பள்ளி

இந்நிலையில் ராணுவ அகாடமி தேர்வில் பெண்களுக்கு அனுமதி வழங்க உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு பெண்களுக்கான உரிமையை மேலும் வலுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது.இந்த உத்தரவை அமல்படுத்த சில நிர்வாக மற்றும் உள்கட்டமைப்பு மாற்றங்கள் செய்யவேண்டியது அவசியம். அதற்கு தேவையான ஆயத்தப் பணிகளை இப்போதே துவங்க வேண்டும்.

இதற்கிடையே கடந்த சுதந்திர தினத்தின் போது செங்கோட்டையில் உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, 'ராணுவத்தில் சேர மாணவர்களை தயார்படுத்த நடத்தப்படும், 'சைனிக்' பள்ளிகளில் சிறுமியருக்கும் அனுமதி வழங்கப்படும்' என, அறிவித்தார். அரசின் இத்தகைய நடவடிக்கைகள் நாட்டின் பாலின சமத்துவத்தை மேலும் உறுதிபடுத்தும் வகையில் அமைந்துள்ளன.

நம் நாட்டில் அரசியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் பெண்களின் பங்கு குறைந்தே காணப்படுகிறது. இதனால் நம் நாட்டின் பாலின இடைவெளி அதிகரித்து காணப்படுவதாக கூறப்படுகிறது.இந்த பாலின இடைவெளியை குறைக்க, பிரதமர் மோடி தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. 'பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' என்ற திட்டத்தின் வாயிலாக, பெண் குழந்தைகளுக்கு கல்வி வழங்கப்பட்டு வருகிறது.

இதேபோல் பெண்களின் வங்கிக் கணக்குகளுக்கு, 500 ரூபாய் 'டிபாசிட்' செய்யும் திட்டம், இலவச சமையல் எரிவாயு வழங்கும், 'உஜ்வாலா' திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் உள்ளன. சில நிறுவனங்களில் மட்டுமே நிர்வாக இயக்குனராக பெண்கள் உள்ளனர். தேசிய கட்சிகள் ஆதரவு இருந்தும் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா நிலுவையில் உள்ளது. இப்படி பல விஷயங்கள் உள்ளன. நாட்டின் வளர்ச்சிக்காக பெண்களுக்கு சம உரிமை வழங்கும் முயற்சிகளை நாம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
29-ஆக-202115:52:14 IST Report Abuse
Pugazh V இவர் திமுகவா?
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
29-ஆக-202113:55:16 IST Report Abuse
Kasimani Baskaran வாய்கிழிய சமத்துவம் பேசும் திராவிட மதத்தினர் கூட கட்சியில் பெண்களுக்கு அதிக இடம் கொடுப்பது கிடையாது.
Rate this:
Cancel
venkatan - Puducherry,இந்தியா
29-ஆக-202108:37:41 IST Report Abuse
venkatan முதலில் குடும்பங்களில் பெண்களை அடக்கி ஆள வேண்டும் என்ற ஆண்களின் மனோபாவம் மாற வேண்டும். நீதித்துறை, சட்ட அமலாக்கம், அரசியல் போன்ற துறைகளில் கண்டிப்பாக 50% அதிரடி இட ஒதுக்கீடு வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X