அரசியல் செய்தி

தமிழ்நாடு

விநாயகர் சிலை வைத்து பூஜை செய்து எம்.பி., முகாம் அலுவலகம் திறந்து வைப்பு எம்.பி.,க்கு போட்டிருந்த இருக்கையில் தி.மு.க., ஒன்றிய செயலர் அமர்ந்த சம்பவத்தால் சர்ச்சை

Added : ஆக 28, 2021
Share
Advertisement
ஆத்தூர்: பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றிய அலுவலக வளாகத்தில், எம்.பி., முகாம் அலுவலகத்தை திறந்து வைத்த, தி.மு.க., ஒன்றிய செயலர், எம்.பி.,க்கு போட்டிருந்த இருக்கையில் அமர்ந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.சேலம் மாவட்டம், ஆத்துார், கெங்கவல்லி, தலைவாசல் ஒன்றிய அலுவலக வளாகத்தில், கள்ளக்குறிச்சி தி.மு.க., எம்.பி., கவுதமசிகாமணிக்கு, முகாம் அலுவலகம் அமைத்துள்ளனர். இவற்றை திறந்து
 விநாயகர் சிலை வைத்து பூஜை செய்து எம்.பி., முகாம் அலுவலகம் திறந்து வைப்பு எம்.பி.,க்கு போட்டிருந்த இருக்கையில் தி.மு.க., ஒன்றிய செயலர் அமர்ந்த சம்பவத்தால் சர்ச்சை

ஆத்தூர்: பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றிய அலுவலக வளாகத்தில், எம்.பி., முகாம் அலுவலகத்தை திறந்து வைத்த, தி.மு.க., ஒன்றிய செயலர், எம்.பி.,க்கு போட்டிருந்த இருக்கையில் அமர்ந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், ஆத்துார், கெங்கவல்லி, தலைவாசல் ஒன்றிய அலுவலக வளாகத்தில், கள்ளக்குறிச்சி தி.மு.க., எம்.பி., கவுதமசிகாமணிக்கு, முகாம் அலுவலகம் அமைத்துள்ளனர். இவற்றை திறந்து வைத்ததுடன், இதுநாள் வரை எம்.பி., வரவில்லை; தி.மு.க., கட்சி அலுவலகம் போல் தான் செயல்படுகிறது.
இந்நிலையில், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றிய அலுவலக வளாகத்தில், இன்று, எம்.பி.,க்கு அலுவலகம் அறையை ஒதுக்கும்படி, பி.டி.ஓ., தமிழ்செல்வனிடம் கேட்டுள்ளனர். அதன்பின், பழைய அலுவலக அறையை கட்சியினர் திறந்து, விநாயகர் சிலை வைத்து, பூஜை செய்தனர்.அந்த புதிய அறையில், எம்.பி.,க்கு போடப்பட்டிருந்த இருக்கையில், உள்ளாட்சி பிரதிநிதியாக கூட இல்லாத, பெத்தநாயக்கன்பாளையம் தி.மு.க., ஒன்றிய செயலர் முருகேசன் அமர்ந்து, கட்சியினருடன் ஆலோசனை செய்துள்ளார்.

தி.மு.க.,வினரின் இச்செயல் குறித்து, வாட்ஸ்ஆப், முகநுால் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவியதால் சர்ச்சை எழுந்துள்ளது.இதுகுறித்து, தி.மு.க., ஒன்றிய செயலர் முருகேசன் கூறுகையில், ''எம்.பி.,க்கு தனியாக அறை ஒதுக்கும்படி கேட்டு, சாவியை வாங்கி தான் திறந்தோம். இன்று (நேற்று), நல்லநாள் என்பதால் பூஜை செய்தோம். அறையை சுத்தம் செய்து தரும்படி பி.டி.ஓ.,விடம் தெரிவித்துள்ளோம்.

அடுத்த வாரத்தில், எம்.பி., கவுதமசிகாமணி, இந்த அலுவலகத்தை திறந்து வைப்பார். நான், அவரது சேரில் அமர்ந்ததை சிலர், வாட்ஸ்ஆப்பில் போட்டுவிட்டனர். இவற்றை பெரிதுப்படுத்த வேண்டாம். அலுவலகத்தை உடைத்ததாக கூறுவது பொய்யான தகவலாகும்'' என்றார்.

இதுப்பற்றி, பி.டி.ஓ., தமிழ்செல்வன் கூறுகையில், ''கள்ளக்குறிச்சி எம்.பி.,க்கு, தனியாக அறை ஒதுக்கும்படி, தி.மு.க.,வினர் கேட்டனர். பழைய கட்டடத்தின் அறையை திறந்துசென்ற விபரம் எனக்கு தெரியவில்லை'' இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X