பொது செய்தி

தமிழ்நாடு

பவானிசாகரில் 102 அடி வரை மட்டுமே நீர் தேக்க முடியும்

Added : ஆக 28, 2021
Share
Advertisement
பவானிசாகர்: பவானிசாகர் அணையில், 105 அடி உயரத்துக்கு நீர் தேக்கலாம். அணை நீர்பிடிப்பு பகுதியான, நீலகிரி மலைப்பகுதிகளில் மழை கொட்டியதால் நீர்மட்டம், 101 அடியை எட்டியது. மொத்த உயரம், 105 அடி என்றாலும், அணை பாதுகாப்பு விதிமுறைப்படி அக்.,31 வரை, 102 அடி மட்டுமே நீரை தேக்க முடியும். இதுகுறித்து அணைப்பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: பொதுப்பணித்துறை மூலம், அணை பாதுகாப்பு விதிமுறை

பவானிசாகர்: பவானிசாகர் அணையில், 105 அடி உயரத்துக்கு நீர் தேக்கலாம். அணை நீர்பிடிப்பு பகுதியான, நீலகிரி மலைப்பகுதிகளில் மழை கொட்டியதால் நீர்மட்டம், 101 அடியை எட்டியது. மொத்த உயரம், 105 அடி என்றாலும், அணை பாதுகாப்பு விதிமுறைப்படி அக்.,31 வரை, 102 அடி மட்டுமே நீரை தேக்க முடியும். இதுகுறித்து அணைப்பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: பொதுப்பணித்துறை மூலம், அணை பாதுகாப்பு விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி பவானிசாகர் அணை கட்டிய காலத்திலேயே, எந்த மாதத்தில், எவ்வளவு நீர் தேக்கலாம் என்ற நிர்ணய விதிமுறை பட்டியலிடப்பட்டுள்ளது. அதன்படி ஆக., மாதம் முதல் அக்.,31 வரை, 102 அடி உயரம் வரை மட்டுமே நீரை தேக்க முடியும். தற்போது இந்த நடைமுறைதான் பின்பற்றப்படுகிறது, இவ்வாறு கூறினர். நேற்று மாலை நிலவரப்படி, 632 கன அடி நீர் வரத்தானது. அணை நீர்மட்டம், 101.67 அடி; நீர் இருப்பு, 30 டி.எம்.சி.,யாக இருந்தது. காளிங்கராயன் பாசனத்துக்கு, 500 கன அடி, குடிநீருக்கு, 100 கன அடி என, 600 கன அடி தண்ணீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X