பொது செய்தி

தமிழ்நாடு

தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்கம்

Added : ஆக 28, 2021
Share
Advertisement
ஈரோடு: தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசன பகுதியில், 31 இடங்களில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள், இன்று முதல் செயல்பாட்டுக்கு வரவுள்ளது.இதுகுறித்து கலெக்டர் கிருஷ்ணனுண்ணி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனத்தில், நெற்பயிர் முதிர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. அறுவடை செய்யப்படும் நெல்லை, அரசின் நேரடி கொள்முதல் மையத்தில், இன்று முதல் கொள்முதல்

ஈரோடு: தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசன பகுதியில், 31 இடங்களில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள், இன்று முதல் செயல்பாட்டுக்கு வரவுள்ளது.


இதுகுறித்து கலெக்டர் கிருஷ்ணனுண்ணி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனத்தில், நெற்பயிர் முதிர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. அறுவடை செய்யப்படும் நெல்லை, அரசின் நேரடி கொள்முதல் மையத்தில், இன்று முதல் கொள்முதல் செய்யப்படுகிறது. இதற்காக ஏளூர், புதுவள்ளியம்பாளையம், கரட்டடிபாளையம், நஞ்சை புளியம்பட்டி, கள்ளிப்பட்டி, காசிபாளையம், டி.என்.பாளையம், மேவாணி, சவுண்டப்பூர், கருங்கரடு, பி.மேட்டுப்பாளையம், பொன்னாச்சிபுதூர், பொலவக்காளிபாளையம் ஆகிய பகுதிகளில், 31 இடங்களில் நெல் கொள்முதல் மையம் திறக்கப்படுகிறது. செப்.,??ம் தேதி வரை இவை செயல்படும். இங்கு 'ஏ' கிரேடு ரக நெல் குவிண்டால், 1,958 ரூபாய்; சாதாரண ரக நெல், 1,918 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்படும். நெல் கொண்டு வரும் விவசாயிகள், வி.ஏ.ஓ., சான்று, நெல் விளைந்த நிலத்தின் பட்டா, சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இரண்டுடன் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X