பொது செய்தி

தமிழ்நாடு

'விநாயகர் சிலைகள் கரைக்க அனுமதி கூடாது'

Added : ஆக 28, 2021
Share
Advertisement
ஈரோடு: கீழ்பவானி வாய்க்காலில், விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதிக்கக்கூடாது என, விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணிக்கு, கீழ்பவானி முறை நீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள், கூட்டாக வழங்கிய மனுவில் கூறியதாவது: கீழ்பவானி பாசன வாய்க்காலில், 200 கி.மீ., நீளத்துக்கு தண்ணீர் பாய்ந்து செல்கிறது. செப்., மாதம் விநாயகர் சதுர்த்தி விழா

ஈரோடு: கீழ்பவானி வாய்க்காலில், விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதிக்கக்கூடாது என, விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணிக்கு, கீழ்பவானி முறை நீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள், கூட்டாக வழங்கிய மனுவில் கூறியதாவது: கீழ்பவானி பாசன வாய்க்காலில், 200 கி.மீ., நீளத்துக்கு தண்ணீர் பாய்ந்து செல்கிறது. செப்., மாதம் விநாயகர் சதுர்த்தி விழா நடக்கிறது. அப்போது வழிபடும் விநாயகர் சிலைகளை, கீழ்பவானி முதன்மை கால்வாயில், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் கரைத்தும், வீசியும் செல்கின்றனர். இதனால் கால்வாயில் தண்ணீர் ஓட்டம் பாதிக்கிறது. கால்வாய் உடையும் அபாயமும் ஏற்படுகிறது. சிலைகளில் பயன்படுத்தப்படும் 'பிளாஸ்டர் ஆப் பாரிஸ்' கரைந்து, மதகுகளில் அடைத்து, நீர் வெளியேறுவதை பாதிக்கிறது. சிலைகளில் பயன்படுத்தப்படும் ரசாயன பொருட்கள், தண்ணீரில் கரைந்து நாற்றங்காலில் முளைத்து வரும் இளம் நாற்றுக்களை கருக செய்கிறது. எனவே கீழ்பவானி வாய்க்காலில் சிலைகள் கரைப்பதை மாவட்ட நிர்வாகம் தடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X