சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அமுக்கமாக கைவரிசை; கமுக்கமாக கட்டட பணி: 'சிசிடிவி'யால் சிக்கிய இளசு

Added : ஆக 28, 2021
Share
Advertisement
சத்தியமங்கலம்: திருட்டையும் செய்து விட்டு, கடமையில் கண்ணும் கருத்துமாக ஈடுபட்ட வாலிபரை, கோழி அமுக்குவது போல், போலீசார் அமுக்கினர்.சத்தியமங்கலம், கோட்டு வீராம்பாளையம், கைக்கோளர் வீதியை சேர்ந்தவர் ஜான்பாஷா. சத்தி பஸ் ஸ்டாண்ட் அருகில் மொபைல்போன் கடை வைத்துள்ளார். நேற்று காலை கடை திறந்தவர் அதிர்ச்சி அடைந்தார். கூரை ஓடு உடைக்கப்பட்டு, 10 மொபைல்போன், ஸ்வைப் மெஷின் திருட்டு

சத்தியமங்கலம்: திருட்டையும் செய்து விட்டு, கடமையில் கண்ணும் கருத்துமாக ஈடுபட்ட வாலிபரை, கோழி அமுக்குவது போல், போலீசார் அமுக்கினர்.


சத்தியமங்கலம், கோட்டு வீராம்பாளையம், கைக்கோளர் வீதியை சேர்ந்தவர் ஜான்பாஷா. சத்தி பஸ் ஸ்டாண்ட் அருகில் மொபைல்போன் கடை வைத்துள்ளார். நேற்று காலை கடை திறந்தவர் அதிர்ச்சி அடைந்தார். கூரை ஓடு உடைக்கப்பட்டு, 10 மொபைல்போன், ஸ்வைப் மெஷின் திருட்டு போனது தெரிந்தது. சத்தி போலீசில் புகாரளித்தார். கடையில் பொருத்தப்பட்டுள்ள 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் மொபைல்போன் கடை அருகே கட்டட பணியில் ஈடுபட்டிருந்த பீஹார் மாநிலத்தை சேர்ந்த சந்தன்குமார், 19, கைவரிசை காட்டியதை கண்டுபிடித்தனர். திருட்டையும் செய்து விட்டு, கடை அருகே நேற்று கட்டட பணியில் ஈடுபட்டிருந்தவரை, போலீசார் கைது செய்தனர். மொபைல் போன்களை பறிமுதல் செய்து, சத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் நடுவர் ஆஜர்படுத்தி, கிளை சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X