பொது செய்தி

தமிழ்நாடு

ஒன்றிய குழு தலைவி மீது ஊழல் புகார்: தி.மு.க., கவுன்சிலர்கள் போராட்டம்

Added : ஆக 28, 2021
Share
Advertisement
கெங்கவல்லி: அ.தி.மு.க., ஒன்றிய குழு தலைவி மீது, ஊழல் புகார் கொடுத்து, தி.மு.க., கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.சேலம், கெங்கவல்லி ஒன்றிய கவுன்சில் கூட்டம், நேற்று நடந்தது. அ.தி.மு.க.,வை சேர்ந்த, ஒன்றிய குழு தலைவி பிரியா தலைமை வகித்தார். அப்போது, துணை தலைவர் விஜேந்திரன், தி.மு.க., கவுன்சிலர்கள் ஐந்து பேர், பி.டி.ஓ., அருள்பாரதியிடம் மனு அளித்தனர். அதில், 'பிரியா,

கெங்கவல்லி: அ.தி.மு.க., ஒன்றிய குழு தலைவி மீது, ஊழல் புகார் கொடுத்து, தி.மு.க., கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


சேலம், கெங்கவல்லி ஒன்றிய கவுன்சில் கூட்டம், நேற்று நடந்தது. அ.தி.மு.க.,வை சேர்ந்த, ஒன்றிய குழு தலைவி பிரியா தலைமை வகித்தார். அப்போது, துணை தலைவர் விஜேந்திரன், தி.மு.க., கவுன்சிலர்கள் ஐந்து பேர், பி.டி.ஓ., அருள்பாரதியிடம் மனு அளித்தனர். அதில், 'பிரியா, சொந்த ஊரான நாகியம்பட்டிக்கு, 1.40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிக்கொண்டார். தம்பி மனைவி வெற்றிச்செல்விக்கு, பதிவறை எழுத்தர் பதவியை கொடுத்துள்ளார். மாடு, ஆடு கொட்டகைக்கு, தலா, 10 ஆயிரம் ரூபாய்; பசுமை வீட்டுக்கு, தலா, 30 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டார். 15வது நிதிக்குழுவில், 90 லட்சம் ரூபாயில், 60 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் விடப்பட்டு, மீதி பணத்தை தன்னிச்சையாக செலவு செய்து வருகிறார். ஒருதலைபட்சமாக முடிவெடுக்கும் இவர் மீது, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவேண்டும்' என கூறியிருந்தனர். பி.டி.ஓ., 'கலெக்டருக்கு தான் அதிகாரம் உள்ளது' என்றார். இதனால், தி.மு.க., கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின், கூட்டம் முடிந்ததாக கூறி, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் சென்றனர். பின், போராட்டம் நடத்தியவர்கள் கலைந்து சென்றனர். பிரியா கூறுகையில், ''தி.மு.க., ஆட்சிக்கு வந்ததால், ஒன்றிய குழு தலைவர் பதவியை கைப்பற்ற பொய் புகார் கொடுத்தனர்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X