பல் மருத்துவர் வீட்டில் 23 பவுன் கொள்ளை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பல் மருத்துவர் வீட்டில் 23 பவுன் கொள்ளை

Added : ஆக 28, 2021
Share
ஓமலூர்: பல் மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து, மர்ம நபர்கள், 23 பவுன் நகை, வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துச்சென்றனர். ஓமலூர், தும்பிப்பாடி, ஒட்டத்தெருவை சேர்ந்தவர் ரங்கநாதன், 43. சேலம், ஐந்து ரோட்டில், பல் மருத்துவமனை வைத்துள்ளார். இவர், தாய் சிவகாமி, 72, மனைவி ஆர்த்தி, 40, ஆகியோருடன் கடந்த, 24ல் சென்னை சென்றுவிட்டு, நேற்று முன்தினம் இரவு, சேலம் நகரமலை அடிவாரத்தில் உள்ள, அவரது

ஓமலூர்: பல் மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து, மர்ம நபர்கள், 23 பவுன் நகை, வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துச்சென்றனர். ஓமலூர், தும்பிப்பாடி, ஒட்டத்தெருவை சேர்ந்தவர் ரங்கநாதன், 43. சேலம், ஐந்து ரோட்டில், பல் மருத்துவமனை வைத்துள்ளார். இவர், தாய் சிவகாமி, 72, மனைவி ஆர்த்தி, 40, ஆகியோருடன் கடந்த, 24ல் சென்னை சென்றுவிட்டு, நேற்று முன்தினம் இரவு, சேலம் நகரமலை அடிவாரத்தில் உள்ள, அவரது மற்றொரு வீட்டுக்கு வந்தனர். இந்நிலையில், தும்பிப்பாடியில் பூட்டியிருந்த வீட்டின் கதவு உடைக்கப்பட்டுள்ளதாக, ரங்கநாதனுக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. அவர் சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த, 23 பவுன் நகை, வெள்ளி பொருட்கள், மடிக்கணினி, மொபைல் போன் கொள்ளைபோனது தெரிந்தது. இதுகுறித்து ரங்கநாதன் புகார்படி, தீவட்டிப்பட்டி போலீசார், மோப்பநாய், கைரேகை நிபுணர்களுடன் சோதனை செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X