சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கவுரவ விரிவுரையாளர் மீது தாக்குதல்: அரசு கல்லூரி துறை தலைவர் மீது புகார்

Added : ஆக 28, 2021
Share
Advertisement
ஆத்தூர்: தமிழ்நாடு அரசு கவுரவர விரிவுரையாளர் சங்கத்தலைவர் செல்வராசு உள்பட, 51 கவுரவ விரிவுரையாளர்கள் கையெழுத்து போட்ட புகார் மனுவை, நேற்று, கல்லூரி முதல்வர், ஆத்தூர் ஊரக போலீசில் கொடுத்தனர். அதன் விபரம்: மாணவர் சேர்க்கை கலந்தாய்வின்போது ஆங்கிலத்துறை கவுரவ விரிவுரையாளர் குணசேகரனை, அதே துறைத்தலைவராக உள்ள ராம்சங்கர், தகாத வார்த்தையில் திட்டி கூலிப்படை வைத்து

ஆத்தூர்: தமிழ்நாடு அரசு கவுரவர விரிவுரையாளர் சங்கத்தலைவர் செல்வராசு உள்பட, 51 கவுரவ விரிவுரையாளர்கள் கையெழுத்து போட்ட புகார் மனுவை, நேற்று, கல்லூரி முதல்வர், ஆத்தூர் ஊரக போலீசில் கொடுத்தனர். அதன் விபரம்: மாணவர் சேர்க்கை கலந்தாய்வின்போது ஆங்கிலத்துறை கவுரவ விரிவுரையாளர் குணசேகரனை, அதே துறைத்தலைவராக உள்ள ராம்சங்கர், தகாத வார்த்தையில் திட்டி கூலிப்படை வைத்து கொன்றுவிடுவேன் என மிரட்டியுள்ளார். குணசேகரன் பணிமுடிந்து வீட்டுக்கு சென்றபோது, ராம்சங்கரின் ஆதரவாளர் எனக்கூறிய கும்பல் தாக்கியதில், அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். ராம்சங்கர், 2013 முதல், 2016 வரை, இதே கல்லூரியில் உதவி ஆசிரியராக பணிபுரிந்தபோது, பல்வேறு புகாருக்கு ஆளாகினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து, போலீசார் கூறுகையில், 'துறை தலைவர், கவுரவ விரிவுரையாளரிடம் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர். ராம்சங்கர் கூறுகையில், ''என் மீது பொய் புகார் கொடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X