பொது செய்தி

தமிழ்நாடு

ஊராட்சி குழு கூட்டத்தில் போலீசார் கெடுபிடி; உறுப்பினர்கள் வெளிநடப்பு

Added : ஆக 28, 2021
Share
Advertisement
தர்மபுரி: தர்மபுரியில் நேற்று நடந்த மாவட்ட ஊராட்சி குழு சாதாரண கூட்டத்தில் பங்கேற்க, உறுப்பினர்கள் வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து, யார் என விசாரித்து அனுப்பினர். போலீசாரின் இச்செயலை கண்டு அதிருப்தியடைந்த உறுப்பினர்கள், கூட்டத்தில் பங்கேற்காமல் திரும்பினர். இதுகுறித்து, மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் யசோதா மதிவாணன் கூறுகையில், ''தர்மபுரி, மாவட்ட ஊராட்சி குழு

தர்மபுரி: தர்மபுரியில் நேற்று நடந்த மாவட்ட ஊராட்சி குழு சாதாரண கூட்டத்தில் பங்கேற்க, உறுப்பினர்கள் வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து, யார் என விசாரித்து அனுப்பினர். போலீசாரின் இச்செயலை கண்டு அதிருப்தியடைந்த உறுப்பினர்கள், கூட்டத்தில் பங்கேற்காமல் திரும்பினர். இதுகுறித்து, மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் யசோதா மதிவாணன் கூறுகையில், ''தர்மபுரி, மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்துக்கு, 17 உறுப்பினர்கள் வந்தனர். நாங்கள் யாரும் கேட்காமலேயே, போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர். அவர்கள் எங்களை தடுத்து விசாரித்தனர். இதனால், அனைவரும் கூட்டத்தை புறக்கணித்து திரும்பினோம்,'' என்றார். மாவட்ட ஊராட்சி செயலாளர் மாரிமுத்துராஜ் கூறியதாவது: மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில், பெண் உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும். அவர்களது கணவரோ அல்லது குடும்ப உறுப்பினர்களோ பங்கேற்கக்கூடாது என, அரசாணை உள்ளது. இதனால் போலீசார் அவர்களை விசாரித்திருக்கலாம்.? மேலும், கொரோனா தடுப்பு விதி அமலில் உள்ளதால், கூட்டத்தை தவிர்க்க போலீசார் அவர்களை விசாரித்துள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X