பொது செய்தி

தமிழ்நாடு

வறட்சியால் பருத்தி விவசாயம் பாதிப்பு

Added : ஆக 28, 2021
Share
Advertisement
பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு, மாரண்டஹள்ளி சுற்றுவட்டார பகுதிகளில், மானாவாரி பயிர் சாகுபடியில் விவசாயிகள் அதிகளவில் ஈடுபடுகின்றனர். இதில், பரவலாக பருத்தி சாகுபடி செய்து வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக போதிய மழையின்றி, பருத்தி சாகுபடி பெரும்பாலும் நடக்கவில்லை. ஓரிரு இடங்களில் கிணற்று பாசனத்தை நம்பி, பருத்தி சாகுபடி செய்தனர். ஆனால், அப்பகுதியில் மகசூல் சரியாக

பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு, மாரண்டஹள்ளி சுற்றுவட்டார பகுதிகளில், மானாவாரி பயிர் சாகுபடியில் விவசாயிகள் அதிகளவில் ஈடுபடுகின்றனர். இதில், பரவலாக பருத்தி சாகுபடி செய்து வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக போதிய மழையின்றி, பருத்தி சாகுபடி பெரும்பாலும் நடக்கவில்லை. ஓரிரு இடங்களில் கிணற்று பாசனத்தை நம்பி, பருத்தி சாகுபடி செய்தனர். ஆனால், அப்பகுதியில் மகசூல் சரியாக கிடைக்காததாலும், மழையின்றி நிலத்தடி நீர் முற்றிலும் இல்லாததால், இப்பகுதிகளில் ஏற்பட்ட வறட்சியால் பருத்தியின் தரம் குறைந்தது விலையும் சரிந்தது. இதனால் விவசாயிகள், தாங்கள் விளைவித்த பருத்தியை அறுவடை செய்யாமல் விளைநிலங்களிலேயே அப்படியே விட்டுள்ளதால், பருத்தி காய்கள் வெடித்து பஞ்சு வீணாகியது. வறட்சியால் பருத்தி விவசாயம் பாதிக்கப்பட்டதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X